ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.!
மேலும் ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களில் டால்பி டிகோடர் வசதி மற்றும் ஸ்மார்ட் ரிமோட் மற்றும் குவெர்டி கீபேட், ஷேக் தி ரிமோட் வசதி கூட உள்ளது .
இந்திய சந்தையில் ஹையர் நிறுவனம் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்லிம் மற்றும் வளைந்த டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த டிவி மாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும்
சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்மார்ட் டிவிகள் தனித்தனி டிஸ்பிளே வித்தியாசங்களில அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய விவர்ங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி பொறுத்வரை 55-இன்ச் (X7000QUA) மற்றும் 65-இனச் (Q9800QUAG) என்ற அமைப்பில் வெளிவந்துள்ளது, 65-இன்ச் டிவி மாடல் மட்டும் சற்று வளைந்த திரை அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு
இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதேபோல் 3840 x 2160பிக்சல் திர்மானம் கொண்டு இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் வெளிவந்துள்ளது.

குவாண்ட்டம் டாட் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் குவாண்டம் டாட் டிஸ்பிளே தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது, அதன்படி சிறந்த மிகவும் பிரகாசமான மற்றும் தெளிவான காட்சி அளிக்கின்றன இந்த புதிய தொழில்நுட்பம். மேலும் ஸ்லிம் டிவி 13எம்எம்
அல்ட்ரா மெல்லிய பெசல்லெஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி டிகோடர்
மேலும் ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களில் டால்பி டிகோடர் வசதி மற்றும் ஸ்மார்ட் ரிமோட் மற்றும் குவெர்டி கீபேட், ஷேக் தி ரிமோட் வசதி கூட உள்ளது எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.
ஸ்மார்ட் ஷேர்
குறிப்பாக இந்த டிவி மாடல்களில் ஸ்மார்ட் ஷேர் அம்சம் இருக்கிறது,இதன் மூலம் டிவி திரையில் வீடியோக்கள்,புகைப்படங்கள், போன்றவற்றை மொபைல் போன்களை இணைத்து பார்க்க முடியும். பின்பு வைஃபை வசதி
இவற்றில் இடம்பெற்றுள்ளது இதன் மூலம் இணையத்தில் உள்ள திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை மிக எளிமையாக பார்க்க முடியும்.

விலை:
55-இன்ச் ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.2,09,990-ஆக உள்ளது.
65-இன்ச் ஹையர் குவாண்ட்டம் டாட் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.2,19,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








