Home
Gadgets

இந்தியாவில் 65-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்த ஹையர்.!

ஹையர் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவியின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3,840×2,160பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட் டிவி.

பெசல்-லெஸ் டிசைன், டால்பி விஷன் ஆதரவு,

அதேபோல் பெசல்-லெஸ் டிசைன், டால்பி விஷன் ஆதரவு, டால்பி ஆடியோ, இன்-பில்ட் க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த புதிய ஹையர் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்ததிரை அனுபவத்தை கொடுக்கும்.

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு

குறிப்பாக ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவியில் எச்டிஆர் ஆதரவும், MEMC தொழில்நுட்பத்திற்கான ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹையர் நிறுவனம்.

ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு

ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. எனவே 5000+ பொழுதுபோக்கு ஆப் பயன்பாடுகள் மற்றும் கேம்களுக்கான அணுகல் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவுடன் 30W ஸ்டீரியோ

Dolby Atmos ஆதரவுடன் 30W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹையர் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி
சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும் என்றே கூறலாம். அதேபோல் புளூடூத் வாய்ஸ் ரிமோட் கொண்டு இந்த ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே யூடியூப் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்றவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும்.

ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி

வைஃபை, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், CI கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என ஹையர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ச் ஆண்

தற்போது அறிமுக சலுகையாக ஹையர் ஒஎல்இடி ப்ரோ 65-இன்ச் ஆண்ட்ராய்டு டிவி தற்போது ரூ.2,39,990-விலையில் கிடைக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட் டிவி அசல் விலை ரூ.4,50,000- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக்கடைகளில் இந்த டிவி வாங்குவதற்குக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Haier OLED Pro 65-inch 4K Android TV Launched : Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X