Home
Gadgets

Haier அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹையர் நிறுவனம் இந்தியாவில் ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி (Haier Mini LED M70 Series TV) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் என ஐந்து மாடல்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய டிவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி அம்சங்கள் (Haier Mini LED M70 Series TV specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள் மினி எல்இடி, டி-எல்இடி பேனல் உடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840 × 2160 பிக்சல்ஸ், 4கே எச்டிஆர், டால்பி விஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

Haier அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் 178 டிகிரி வியூ ஆங்கிள் ( Viewing Angle), 16:9 அஸ்பெக்ட் ரேசியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள். குறிப்பான இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹையர் நிறுவனம்.

யூசர் (User), ஸ்டான்டர்டு (Standard), விவிட் (Vivid), ஸ்போர்ட்ஸ் (Sport), மூவி (Movie), கேம் (Game), என்ர்ஜி சேவிங் (Energy Saving) போன்ற பிக்சர் மோட்களை கொண்டுள்ளன இந்த புதிய ஹையர் 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவி மாடல்கள்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)ஆதரவும் இந்த ஹையர் டிவி மாடல்களில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Haier அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்றசப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

டாலபி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் DBX-TV உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த புதிய டிவிகளில் உள்ளன. அதுவும் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் மாடல்கள் 50Wஆடியோ அவுட்புட் வழங்கும். இதன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டுமே 30W ஆடியோ அவுட்புட் வழங்கும் என்று கூறப்படுகிறது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.1, வைஃபை, ஈதர்நெட் லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த புதிய டிவிகளில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.

Haier அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் விலை மற்றும் விற்பனை

ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் 43 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.39,190-ஆக உள்ளது.
ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் 55 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.56,590-ஆக உள்ளது.
ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் 65 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.74,990-ஆக உள்ளது.
ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் 75 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,02,990-ஆக உள்ளது.
ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் 85 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,69,990-ஆக உள்ளது.

தற்போது இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய ஹையர் மினி எல்இடி எம்70 சீரிஸ் டிவி மாடல்கள் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Haier Mini LED M70 Series TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X