அதிரவிடும் விலை.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. புதிய Haier டிவிகள் அறிமுகம்.. எந்த மாடல்?
ஹையர் நிறுவனம் இந்தியாவில் ஹையர் எம்80எப் சீரிஸ் (Haier M80F series) ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் 4கே மினி எல்இடி ஸ்மார்ட் டிவிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹையர் எம்80எப் சீரிஸ் அம்சங்கள் (Haier M80F series 4K Mini LED TV Specifications): பெசல்-லெஸ் (bezel-less) உடன் இந்த நான்கு டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. மேலும் 4கே ரெசல்யூஷன் (4K resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (800 nits peak brightness), 10-பிட் லைட் கண்ட்ரோல் (bit light control) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளன இந்த ஹையர் எம்80எப் சீரிஸ் மினி எல்இடி டிவி மாடல்கள்.

இதுதவிர எச்டிஆர் 10 (HDR10), டால்பி விஷன் (Dolby Vision), டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification)போன்ற அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளன. எனவே இந்த ஹையர் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)ஆதரவும் ஹையர் எம்80எப் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹையர் நிறுவனம்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹையர் டிவிகள் இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (jioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
KEF சப் வூஃபர் (KEF subwoofer), டால்பி அட்மாஸ் (Dolby Atmo), dbx-tv உடன் கூடிய 2.1-சேனல் சிஸ்டம் (2.1-channel system) கொண்டுள்ளன இந்த புதிய ஹையர் ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் டிஎல்ஜி ரெஃப்ரெஷ் ரேட் (120Hz DLG refresh rate) ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய டிவிகள்.
எச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1), ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR), ஷேடோ என்ஹான்ஸ்மென்ட் (Shadow Enhancement) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்கள் இந்த புதிய ஹையர் டிவிகளில் உள்ளன.ஹைஸ்மார்ட் செயலியை (HaiSmart app) இந்த ஹையர் டிவிகளில் பயன்படுத்த முடியும்.

வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) ஆதரவைக் கொண்டுள்ளது ஹையர் எம்80எப் சீரிஸ் மாடல்கள். சோலார் பவர் ரிமோட் ஆதரவும் இந்த டிவிகளுடன் வருகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் ஹையர் எம்80எப் சீரிஸ் மாடல்களில் உள்ளன.
ஹையர் எம்80எப் சீரிஸ் மினி எல்இடி 4கே டிவி ஆரம்ப விலை ரூ.67,990-ஆக உள்ளது. இந்தியா முழுவதும் இ-காமர்ஸ் (E-Commerce) மற்றும் ரீடைல் ஸ்டோர்களில் இந்த புதிய ஹையர் டிவிகள் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








