வெள்ளை ஏசியை விட இந்த கருப்பு AC-க்கு பவர் ஜாஸ்தி.. ஆனா கரண்ட் பில் கம்மி.. எந்த Haier மாடல்? என்ன விலை?
ஹையர் (Haier) நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஹையர் கினோச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனர் (Haier Kinouchi Dark Edition Air Conditioner) என்ற ஏசியை (AC) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் ஏசி அதிநவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் ஸ்டைலான லுக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சந்தையில் விற்பனையாகும் ஏசி சாதனங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் (White colour AC) மட்டுமே காணப்படுகிறது. முதல் முறையாக முழு கருப்பு நிறத்தில் புதிய ஏசி (Black colour AC) சாதனமாக இந்த ஹையர் ஏசி (Haier AC) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹையர் கினோச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனர் (Haier Kinouchi Dark Edition Air Conditioner) சாதனம் தற்போது 1.6 டன் (1.6 Tons AC) மற்றும் 1.0 டன் (1.0 Tons AC) மாடலாக வெளிவந்துள்ளது. இது தற்போது சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 1.0 டன் ஏசி மாடல்களை விட இந்த ஹையர் ஏசி சாதனம் 20 மடங்கு வேகமான கூலிங்கை (Faster cooling) தருகிறது.

ஹையர் கினோச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனர் (Kinouchi Dark Edition Air Conditioner):
உண்மையை சொல்ல போனால், இந்த ஹையர் கினோச்சி டார்க் எடிஷன் ஏசி (Haier Kinouchi Dark Edition AC) மிகவும் சக்தி வாய்ந்தது. உங்கள் வெளிப்புற வெப்பம் 60 டிகிரி செல்ஸியஸ் (60 degrees Celsius) ஆக இருந்தாலும் கூட, இது உங்கள் அறையை சூப்பராக குளிர்விக்கிறது. அதேபோல் இதில் ஃபிரோஸ்ட் செல்ஃப் கிளீன் டெக்னாலஜி அம்சமும் (Frost Self-Clean Technology) உள்ளது. இதன் மூலம் 99.9% ஸ்ட்ரெலைசேஷன் பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்த ஏசி சாதனம் வெறும் 15 நிமிடங்களில் சுத்தமான குளிர்ந்த காற்றை 6 நிமிட ட்ரை டைம் உடன் வழங்குகிறது. இந்த ஏசி மாடல் முழுமையான டிசி இன்வெர்டர் டெக்னாலஜி (Full DC Inverter technology) உடன் டூயல் டிசி கம்ப்ரஸர் (dual DC compressor) உடன் மிகவும் சக்திவாய்ந்த ஆற்றல் மிகுந்த சாதனமாக இந்த ஏசி வெளிவந்துள்ளது.
இதுவொரு ஸ்மார்ட் ஏசி (Smart AC) போல செயல்படுகிறது. இதனால் மின்சாரத் தேவை சிக்கனமாக பயன்படுத்துகிறது. இதில் உள்ள டர்போ (TURBO) மோட் 20 மீட்டர் தூரம் வரை குளிர்ந்த காற்றை மூலைமுடுக்குகளில் எல்லாம் பரவச்செய்கிறது. இது நீண்ட நாள் உழைக்கும் வகையில், மிகவும் பிரத்தியேகமான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஹையர் நிறுவனம் கூறியுள்ளது. இது 5 வருட வாரன்டியுடன் வருகிறது.
வெள்ளை நிற ஏசியை விட இந்த கருப்பு AC-க்கு பவர் ஜாஸ்தி.. கரண்ட் பில் கம்மி.. விலை என்ன?
இந்த புதிய ஹையர் கினோச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனர் (Haier Kinouchi Dark Edition Air Conditioner) விலை பற்றி பேசுகையில், இது ரூ. 46,990 என்ற விலையுடன் ஆரம்பமாகிறது. தற்போது இந்த ஏசி மாடல் ஆன்லைன் மற்றும் ரீடைலர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. இதன் மீது தற்போது 15% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலவச இன்ஸ்டாலைசேஷன் மற்றும் லைப் டைம் கம்பிரஸர் வாரன்டி உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications