Home
Gadgets

சியோமி ஓரம்போ: ரூ.22,990 விலையில் ஹையர் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!

மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சியோமி நிறுவனம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், இதற்கு போட்டியாக சீனாவை சேர்ந்த ஹையர் நிறுவனம் ஸ்மார்ட் அம்சங்களை கொண்ட இரண்டு புதிய டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

தற்சமயம் ஹையர் நிறுவனம் LE43B9200WB மற்றும் LE32B9200WB என்ற ஸ்மார்ட் டிவி மாடல்களை தான் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

LE43B9200WB எல்இடி டிவி:

LE43B9200WB எல்இடி டிவி:

LE43B9200WB எல்இடி டிவி பொறுத்தவரை 42.5-இன்ச் முழு எச்டி ஸ்கிரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1080 பிக்சர் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பிரைட்நஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

 LE43B9200WB ஆடியோ:

LE43B9200WB ஆடியோ:

LE43B9200WB டிவி 10Wx2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி டிஜிட்டல் டிகோடருடன் உயர்தர ஆடியோ வெளியீடு அம்சங்களைக் கொண்டுள்ளது, பின்பு 3எச்டிஎம்ஐ போர், 3யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 LE32B9200WB எல்இடி டிவி:

LE32B9200WB எல்இடி டிவி:

LE32B9200WB டிவி பொறுத்தவரை 32.4-இன்ச் எச்டி ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பிரைட்நஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

LE32B9200WB ஆடியோ:

LE32B9200WB ஆடியோ:

LE32B9200WB டிவி பொறுத்தவரை 10Wx2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி டிஜிட்டல் ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் 2எச்டிஎம்ஐ போர்ட், 1யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

புதிய அம்சம்:

புதிய அம்சம்:

ஹையர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய டிவி மாடல்களில் Smart Share என்ற விருப்பம் உள்ளது, இது வைஃபை அல்லது ப்ளூடூத் இணைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனர்கள் தொலைக்காட்சியை எளிமையாக இயக்க முடியும்.

விலை:

விலை:

மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு LE43B9200WB எல்இடி டிவி மாடலின் விலை ரூ.40,990-ஆக உள்ளது. அதேபோல் LE32B9200WB டிவி மாடலின் விலை ரூ.22,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Haier India launches new “Easy Connect” LED Television range, price starts at Rs 22,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X