ஹையர் அறிமுகம் செய்த HQLED டிவிகள்.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹையர் நிறுவனம் இந்தியாவில் ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் டிவி மாடல்களை (Haier HQLED P7 Pro Series TVs) தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் என ஐந்து மாடல்களில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Haier HQLED P7 Pro Series TVs specifications): HQLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளன புதிய ஹையர் டிவி மாடல்கள். மேலும் இவற்றின் டிஸ்பிளேவில் டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், 93 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டிவி மாடல்கள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஹையர் தற்போது அறிமுகம் செய்துள்ள 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மாடல்களில் கூகுள் டிவி இயங்குதளம் உள்ளது. ஆகவே இந்த டிவிகளில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கிடைக்கும்.
அதுவும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவி மாடல்களில் பயன்படுத்தலாம். இதுதவிர ஜெமினி (Gemini) ஆதரவும் இந்த புதிய டிவிகளில் உள்ளது.
எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளது. அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), கேமிங் பார் இன்டர்ஃபேஸ் (Gaming Bar interface) போன்ற அம்சங்களும் இந்த டிவி மாடல்களில் உள்ளன.

Total Sonics மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 50W 2.1-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டுள்ளது இந்த ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் மாடல்கள். எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75 இன்ச் டிவிகள் மட்டுமே சப்-ஊஃபர் ஸ்பீக்கர் (Subwoofer) வசதியை பெற்றுள்ளன.
ஏஐ எச்டிஆர் என்ஹான்சர் (AI HDR Enhancer), ஏஐ கலர் பூஸ்ட் (AI Colour Boost) AI Motion, ஏஐ நாய்ஸ் ரெடக்சன் உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்கள் இந்த ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் மாடல்களில் உள்ளன. ஆகவே இந்த டிவிகள் மேம்பட்ட ஏஐ அனுபவத்தை வழங்கும்.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. வைஃபை, புளூடூத் 5.1, ஹைகாஸ்ட் ஸ்கிரீன் மிரரிங், புளூடூத் ஸ்பீக்கர் மோட், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹையர் டிவி மாடல்களில் உள்ளன.

கண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ் பெற்றுள்ளன புதிய ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் டிவி மாடல்கள். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான வசதிகளும் இந்த டிவிகளில் உள்ளன.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் டிவி மாடல்களின் விலை
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் 43 இன்ச் டிவியின் விலை ரூ.35,990-ஆக உள்ளது.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் 50 இன்ச் டிவியின் விலை ரூ.43,490-ஆக உள்ளது.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் 55 இன்ச் டிவியின் விலை ரூ.49,990-ஆக உள்ளது.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் 65 இன்ச் டிவியின் விலை ரூ.67,990-ஆக உள்ளது.
ஹையர் எச்கியூஎல்இடி பி7 ப்ரோ சீரிஸ் 75 இன்ச் டிவியின் விலை ரூ.90,990-ஆக உள்ளது.
இந்தியா முழுவதும் ரீடைல் ஸ்டோர்களில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications