Home
Gadgets

பொங்கலுக்கு போட்டான் பாரு.. மட்ட ரேட்ல 55 இன்ச் Haier டிவி.. டால்பி ஆடியோ.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவு விலைக்கு 43 இன்ச் முதல் 65 இன்ச் வரையில் ஸ்மார்ட் டிவிகளை களமிறக்கி வரும் ஹையர் (Haier) நிறுவனமானது, இப்போது ஹையர் எச்5இ சீரிஸ் 4கே டிவி (Haier H5E Series 4K TV) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அடிமட்ட விலைக்கு கிடைக்க உள்ளது. இந்த ஹையர் எச்5இ சீரிஸ் 4கே டிவி மாடல்களின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

மற்ற ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் ரூ.50,000 பட்ஜெட்டில் 55 இன்ச் டிவி மாடல்களை மட்டுமே கொடுக்கின்றன. இருப்பினும், பெரிதாக பீச்சர்களை அதில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஹையர் நிறுவனம் 65 இன்ச் டிவியை கொடுக்கிறது. பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த சீரிஸ் மாடல்களில் 43 இன்ச் டிவி ரூ.24,990 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு போட்டான் பாரு.. மட்ட ரேட்ல 55 இன்ச் Haier டிவி.. மாடல்?

ஹையர் எச்5இ சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Haier H5E Series 4K TV Specifications): 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10), 320 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. எம்இஎம்சி (MEMC) மற்றும் எச்எல்ஜி (HLG) கொண்டுள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) இந்த ஹையர் எச்5இ சீரிஸ் 4கே டிவிகள் கொடுக்கின்றன. இதில் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), வெப் பிரவுசர் (Web Browser), குரோம்காஸ்ட் பில்ட் இன் (Chromecast Built In) மற்றும் கூகுள் வாட்ச்லிஸ்ட் ( Google Watchlist) கிடைத்துள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை கொடுத்துள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கொண்டுள்ளது.

பிரைம் வீடியோ (Prime Video) நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (Zee5) மற்றும் யூடியூப் (Youtube) ஆகிய ஓடிடி ஆப்கள் இந்த ஹையர் எச்5இ சீரிஸ் 4கே டிவி மாடல்களில் கிடைக்கின்றன. 20 W சவுண்ட் அவுட்புட் கொண்ட டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Down Firing Speakers) கிடைக்கின்றன. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளது.

டோடல் சோனிக் (Total Sonic) மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) கொடுத்துள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் வை-பை 5 (Wi-Fi 5) கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) உள்ளன. 2 யுஎஸ்பிஐ போர்ட்கள் (USB Ports), ஈதர்நெட் எல்ஏஎன் (Ethernet LAN) கிடைக்கிறது. ஹெட்போன் ஜாக், ஏவி இன் உள்ளது.

43 இன்ச் ஹையர் டிவி (43H5E) மாடலின் விலை ரூ.24,990ஆகவும், 50 இன்ச்ஹையர் டிவி (50H5E) மாடலின் விலை ரூ.30,990ஆகவும் இருக்கிறது. மேலும், 55 இன்ச் ஹையர் டிவி (55H5E) மாடலின் விலை ரூ.35,990ஆகவும், 65 இன்ச் ஹையர் டிவி (65H5E) மாடலின் விலை ரூ.54,990ஆகவும் இருக்கிறது. இந்த ஹையர் எச்5இ சீரிஸ் டிவிகளுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது.

பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் இதர ரீடெயில் ஸ்டோர்களிலும் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பெசல் லெஸ் டிசைன் (Bezel-Less Design), கூகுள் டிவி ஓஎஸ், 4K யுஎச்டி ரெசொலூஷன் கொண்ட டிவி மாடல்களாக இருப்பதால் இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால், இது பட்ஜெட் விலை மாடல்களாக இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Haier H5E Series 43 inch 50 inch 55 inch 65 inch 4K Google TV Launched in India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X