அமேசான் Mega சேல்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆஃபரில் Haier 4கே டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் இப்போது Amazon Mega Deal Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் தரமான ஹையர் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி (Haier H5E Series 43 4K Ultra HD Smart LED Google TV)மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Haier H5E Series 43 inch 4K Smart Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 320 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக 7 மல்டி பிக்சர் மோட்கள், 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதுவும் மல்டி-கோர் கார்டெக்ஸ் CA55 (Multi-Core Cortex CA55) பிராசஸர் உடன் இந்த ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி-ஜி52 (mali g52) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.
அதேபோல் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு இந்த ஹையர் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஹையர் 43 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 43 இன்ச் ஹையர் டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் வெளிவந்துள்ளது. எனவே இதில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஹையர் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. ஆகவே இந்த ஹையர் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் வருகிறது.
மேலும் ஹையர் எச்5இ சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஹையர் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications