வாங்குனா இந்த TV-ய வாங்கனும்.. 77 இன்ச் OLED டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்!
பிரீமியம் டிவி பிரியர்களையே மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான பீச்சர்களுடன் ஹையர் சி90 (Haier C90) மற்றும் ஹையர் சி95 (Haier C95) ஓல்இடி டிவி மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல், ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்களுடன் மிரளவிட்டுள்ளது. டால்பி விஷன், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த மாடல்களின் டிஸ்பிளே சைஸ்களில் மட்டும் மாற்றங்கள் இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
பெசல்-லெஸ் மெட்டாலிக் டிசைனில் (Bezel-less Metal Design) பிரீமியம் லுக் கொடுக்கிறது. டால்பி விஷன் ஐகியூ மற்றும் டால்பி அட்மோஸ் கிடைப்பதால் மினி-தியேட்டர் அனுபவத்தை எதிர்பார்க்கலாம். இதற்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்க 65W ஆடியோ அவுட்புட் கொடுக்கும்படி ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

ஹையர் சி90 டிவியில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்ட கொண்ட மாடல்கள் கிடைக்கின்றன. அதேபோல ஹையர் சி95 டிவியில் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட மாடல்கள் கிடைக்கின்றன. சி95 மாடல்களானது விலையில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருப்பதால், பீச்சர்களும் கொஞ்சம் பிரீமியமாக இருக்கின்றன.
ஆகவே, அந்த மாடலில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், விஆர்ஆர் மற்றும் ஏஎல்எல்எம் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் (AMD FreeSync Premium) டெக்னாலஜி கிடைக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கு லேக்-ப்ரீ அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கக் கூடியது. மேலும், டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) மற்றும் எச்டிஆர்பிளஸ் (HDR10+) வருகிறது.
ஹையர் சி90 மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதேபோல ஆடியோவிலும் மாறுதல்கள் இருக்கின்றன. 2.1 சேனல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. சி95 மாடலில் மட்டும் ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் (Harman Kardon Speakers) கிடைக்கின்றன. இரண்டு மாடல்களிலும் 50W ஆடியோ அவுட் கிடைக்கிறது.
ஆனால், 77 இன்ச் மாடலில் மட்டும் 65W ஆடியோ அவுட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல் டிபிஎக்ஸ்-டிவி டெக்னாலஜி (dbx-tv technology) கிடைக்கிறது. இதுவொரு ஆடியோ என்ஹான்ஸ்மெண்ட் டெக்னாலஜி (Audio Enhancement Technology) சப்போர்ட்டாகும். ஆகவே, இன்-பில்ட் ஸ்பீக்கர்களிலேயே ஆடியோ குவாலிட்டி அல்ட்ரா பிரீமியமாக இருக்கும்.
இரண்டு மாடல்களிலும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் பிளே ஸ்டோர், குரோம்காஸ்ட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. சோலார் பவர்ட் ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கூடுதலாக கிடைக்கிறது. கனெக்டிவிட்டி பீச்சர்கள் எப்படி?
இந்த ஹையர் டிவி மாடல்ளில் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஹைய்காஸ்ட் (HAICAST) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஹையர் சி90 டிவியின் ஆரம்ப விலை ரூ.1,29,990 பட்ஜெட்டிலும், ஹையர் சி95 டிவியின் ஆரம்ப விலை ரூ.1,56,990ஆக இருக்கிறது. ஹையர் இந்தியா தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற தளங்களில் விரைவில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications