கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஒஎஸ்.. ஆஃபரில் ஹையர் 4K டிவி.. எந்த மாடல்?
ஹையர் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஹையர் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹையர் நிறுவனத்தின் 43 இன்ச் 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஹையர் ஏ9யுஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 ( Haier A9UG 43 inch 4K Google TV 2025) மாடலுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஹையர் ஏ9யுஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 அம்சங்கள் ( Haier A9UG 43 inch 4K Google TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹையர் ஏ9யுஜி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்தது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 (HDR10), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான ஏஆர்எம் மல்டிகோர் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. மேலும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் ஹையர் ஏ9யுஜி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த 43 இன்ச் ஹையர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
ஹையர் ஏ9யுஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஹையர் டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஹையர் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. ஆகவே இந்த ஹையர் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் வருகிறது.
இந்த ஹையர் ஏ9யுஜி 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலில் அனைத்து சிறப்பான அம்சங்களும் உள்ளன. ஆகவே அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹையர் டிவி மாடல் ஆனது பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹையர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








