Home
Gadgets

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை.. 55 இன்ச் 4K டிவிக்கு விலை குறைப்பு.. டால்பி ஆடியோ.. HDR 10.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) என்ற சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான ஹையர் (Haier) நிறுவனத்தின் 55 இன்ச் டிவி ஒன்று விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.

அதாவது ஹையர் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Haier 55 inch Ultra HD 4K Smart Google TV 2025) மாடல் முன்பு ரூ.60,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.35,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.31990 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை.. 55 இன்ச் 4K டிவிக்கு விலை குறைப்பு

ஹையர் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Haier 55 inch 4K Google TV 2025 Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹையர் 55 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10, 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 320 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

ஏஆர்எம் அட்வான்ஸ்டு மல்டி-கோர் கார்டெக்ஸ் CA55 (ARM Advanced Multi-Core Cortex CA55) பிராசஸர் உடன் இந்த ஹையர் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி-ஜி52 (mali g52) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு இந்த ஹையர் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஹையர் 55 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஹையர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை.. 55 இன்ச் 4K டிவிக்கு விலை குறைப்பு

ஹையர் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஹையர் டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ(Dolby Audio) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் ஹையர் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது. ஆகவே இந்த ஹையர் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Haier 55 inch 4K Google TV 2025 price Drop in Flipkart Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X