லைவ் ஸ்ட்ரீமிங்குடன் களமிறங்கும் மூன்று கோ-ப்ரோ கேமரா.! விலை எவ்வளவு தெரியுமா?

கோ ப்ரோ நிறுவனம் தனது மூன்று புதிய கோ ப்ரோ ஹீரோ 7 லைன் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.

|

கோ ப்ரோ நிறுவனம் தனது மூன்று புதிய கோ ப்ரோ ஹீரோ 7 லைன் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ 7 லைன் வரிசையில் புதிய மாடல் கேமராக்களை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 200 டாலர் முதல் 400 டாலர் வரை என்று அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

இந்த புதிய கோ ப்ரோ ஹீரோ 7 லைன் பிளாக் கேமராகள் முன் பக்க எல்.சி.டி திரையுடன் வருகிறது. இதில் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியும் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த புதிய கோ ப்ரோ கேமரா இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஹீரோ 6 லைன் கேமராகளை விட அதிநவீனமானது என்று கோ ப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

இத்துடன் இந்த புதிய ஹீரோ 7 லைன் கேமராகளில் லைவ் ஸ்ட்ரீமிங் உட்பட டைம் லாப்ஸ் சேவை மற்றும் எச்.டி.ஆர் போட்டோகிராபி சேவை, வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் வாட்டர் புரூப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைவ் ஸ்ட்ரீமிங்குடன் களமிறங்கும் மூன்று கோ-ப்ரோ கேமரா.! விலை.!

சில்வர் மற்றும் வைட் ஹீரோ 7 லைன் கேமரா 10 மெகா பிக்சல் சென்சாருடன் வருகிறது. வைட் மாடல் ஹீரோ 7 லைன் 1080p வீடியோ 60fps பதிவு சேவையுடன் வருகிறது. சில்வர் மாடல் ஹீரோ 7 லைன் 4K30 வீடியோ 60fps பதிவு சேவையுடன் வருகிறது, இத்துடன் ஜிபிஎஸ் சேவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ 7 லைன் பிளாக் ஹைப்பர் ஸ்மூத் இமேஜ் ஸ்டெப்பிலைஸர் உடன் அதிர்வுகளே இல்லாத வீடியோ பதிவு சேவையை வழங்குகிறது. "ஷேக்கி வீடியோ இஸ் டெட்" என்ற வாக்கியத்துடன் விளம்பரம் செய்யப்ட்டிற்குறது. பிளாக் ஹீரோ 7 லைன் கேமரா 12 மெகா பிக்சல் சென்சாருடன் வருகிறது, இத்துடன் 4K60 வீடியோ 240fps பதிவு சேவை, ஜிபிஎஸ் சேவை, லைவ் ஸ்ட்ரீமிங் வசதி, 8X ஸ்லொவ் மோஷன், வாட்டர் புரூப், எச்.டி.ஆர் போட்டோகிராபி மற்றும் ஹைப்பர் ஸ்மூத் சேவையுடன் வருகிறது.

லைவ் ஸ்ட்ரீமிங்குடன் களமிறங்கும் மூன்று கோ-ப்ரோ கேமரா.! விலை.!

விலை :

- வைட் ஹீரோ 7 லைன் கேமரா 200 டாலர்.
- சில்வர் ஹீரோ 7 லைன் கேமரா 300 டாலர்.
- பிளாக் ஹீரோ 7 லைன் கேமரா 400 டாலர்.

இந்த புதிய ஹீரோ 7 லைன் கேமராகள் செப்டம்பர் 27 முதல் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
GoPro unveils Hero7 line with enhanced image stabilization, live streaming : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X