களமிறங்க GoPro Hero8 மற்றும் GoPro Hero Max! விலை என்ன தெரியுமா?

|

GoPro நிறுவனம் புதிய GoPro Hero8 மற்றும் GoPro Hero Max என்ற இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய GoPro Hero Max சாதனம் முன்பக்க எல்சிடி டிஸ்ப்ளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய மாடல் கோ ப்ரோ மாடல்கள் பற்றிய முழு விபரங்களைப் பார்க்கலாம்.

கோ ப்ரோ ஹீரோ 8

கோ ப்ரோ ஹீரோ 8

கோ ப்ரோ ஹீரோ 8 (GoPro Hero8) சாதனத்தின் புதிய டிசைன் வடிவம் அட்டகாசமாக அமைந்துள்ளது. கோ ப்ரோ ஹீரோ 8 சாதனம், முழு எச்.டி தரத்தில் 1080p மற்றும் 4K வீடியோக்களை பதிவுசெய்கிறது. அதேபோல் இதில் ஹைபர் ஸ்மூத் 2.0 மற்றும் இரண்டாம் தலைமுறை டிஜிட்டல் ஸ்டெபிலைசர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

முன்பு இருக்கும் GoPro Hero7 மாடலை போலவே இதனுடைய சாப்ட்வேர் சேவை ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில புதிய மாற்றங்களை கோ ப்ரோ நிறுவனம் தற்போது இந்த கோ ப்ரோ ஹீரோ 8 பிளாக் சாதனத்தில் களமிறக்கியுள்ளது.

17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.!17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.!

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

கோ ப்ரோ ஹீரோ 8 (GoPro Hero8) சாதனத்தில் டைம் வார்ப் 20, ஸ்பீட் ரெகார்டிங் மோடு, மைக் ரெகார்டிங்கான ஆன்-போர்டு விண்ட் சப்ரஷன்(on-board wind suppression for mic-free recording) கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் பில்டர்கள் பொருத்துவதற்கான பிரத்தியேக ஸ்லாட் ஒன்றையும் கோ ப்ரோ மாடல்களில் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

புதிய கோ ப்ரோ 'மோட்ஸ்'

புதிய கோ ப்ரோ 'மோட்ஸ்'

புதிய GoPro Hero8 மற்றும் GoPro Hero Max மாடல்களுடன் கோ ப்ரோ நிறுவனம், புதிய கோ ப்ரோ 'மோட்ஸ்' சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. கோ ப்ரோ மோட்ஸ் இல் உள்ளமைக்கப்பட்ட ஷாட்கன் மைக்கை உள்ளடக்கிய மீடியா மோட் ($ 79.99) உள்ளது. ஃபிளிப்-அப் எல்சிடி வ்யூஃபைண்டர் கொண்ட டிஸ்ப்ளே மோட் ($ 79.99) மற்றும் 200 லுமேன் எல்இடி வீடியோ ஒளி மூலத்தைக் கொண்ட லைட் மோட் ($ 49.99) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

15மாதங்கள் ஆற்றில் மூழ்கியிருந்தும் இயங்கும் ஐபோன்: இதுதான் தரம்.!15மாதங்கள் ஆற்றில் மூழ்கியிருந்தும் இயங்கும் ஐபோன்: இதுதான் தரம்.!

360 டிகிரி ரெகார்டிங்

360 டிகிரி ரெகார்டிங்

GoPro Fusion சாதனத்தின் வெற்றியைத் தொடர்ந்து GoPro Hero Max தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 360 டிகிரி முரட்டுத்தனமான ரக்குடு அதிரடி கேமரா மாடலாக புதிய கோ ப்ரோ ஹீரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ் சமமாக 360 டிகிரி ரெகார்டிங் வழங்குகிறது மற்றும் இதன் சிறந்த ஒற்றை லென்ஸ், வைடு ஆங்கிள் காட்சிகளையும் பதிவு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 5.6K வீடியோவை 360 டிகிரி ரெகார்டிங்

5.6K வீடியோவை 360 டிகிரி ரெகார்டிங்

ஹீரோ மேக்ஸ் இரண்டு லென்ஸ்களை கொண்டுள்ளது; இதன்முலம் 5.6K வீடியோவை 360 டிகிரி கோணத்தில் ரெகார்டிங் செய்யமுடிடியும். இதில் முன்பக்க டிஸ்பிளேயும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1080P லைவ் ஸ்ட்ரீம் சேவை, ஆட்டோமெட்டிவ் போட்டோ மற்றும் வீடியோ கிளவுட் பேக்கப் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

விஷயம் தெரியுமா? செல்போன் ரிங் அடிக்கும் நேரம் குறைப்பு: திடீர் நடவடிக்கை: ஏன்?விஷயம் தெரியுமா? செல்போன் ரிங் அடிக்கும் நேரம் குறைப்பு: திடீர் நடவடிக்கை: ஏன்?

புதிய GoPro Hero8 மற்றும் GoPro Hero Max விலை

புதிய GoPro Hero8 மற்றும் GoPro Hero Max விலை

GoPro Hero Max சாதனம் இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.35541 என்ற விலையில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் GoPro Hero8 சாதனம் இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.28419 என்ற விலையில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் ஷிப்பிங் செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
GoPro Hero8 and GoPro Hero Max Launched With Front Facing LCD Display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X