40 மணி நேர பேட்டரி, Actua 360 ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே.. Google Pixel Watch 4 அறிமுகம்.. என்ன விலை?
கூகுள் (Google) நிறுவனமானது இன்று (ஆக.20) நடந்த மேட் பை கூகுள் நிகழ்வில் அதன் பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அதன் பிக்சல் வாட்ச் 4 (Pixel Watch 4) மாடலையும் அறிமுகம் செய்தது. இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்சல் வாட்ச் 4 மாடலின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் குறித்த விரிவான விவரங்கள் இதோ:
கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் விலை: இந்தியாவில் கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் 41மிமீ (வைஃபை) வேரியண்ட் ஆனது ரூ.39,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்வாட்ச் ஆனது 45மிமீ அளவிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 43,900 ஆகும்.

41மிமீ வேரியண்ட் ஆனது ஐரிஸ், லெமன்கிராஸ், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்றும், மறுகையில் உள்ள 45மிமீ பிக்சல் வாட்ச் 4 வேரியண்ட் ஆனது மூன்ஸ்டோன், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் வாட்ச் 4 முழு அம்சங்கள்: கூகுள் பிக்சல் வாட்ச் 4 ஆனது முந்தைய மாடலை போலவே கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இருப்பினும் பெசல்கள் மற்றும் பீக் ப்ரைட்னஸ் தொடர்பாக மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது. இது பிக்சல் வாட்ச் 3 உடன் ஒப்பிடும்போது 3,000 வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 16 சதவீதம் மெல்லிய பெசல்களுடன் ஆக்சுவா 360 ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த ஸ்மார்ட்வாட்சை இயக்கும் வன்பொருளின் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. இது பிக்சல் வாட்சின் முந்தைய இரண்டு மடல்களில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 சிப்செட் உடன் தான் வருகிறது. இதற்காக கூகுள் எந்த புதிய அம்சங்களையும் சேர்க்கவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
கூகுளின் கூற்றுப்படி, பிக்சல் வாட்ச் 4 ஆனது ஸ்மார்ட் பதில்களுக்கான ஆதரவையும், ஜெமினை வாய்ஸ் அசிஸ்டென்ட்டிற்கான விரைவான அணுகலையும் கொண்டுள்ளது. மேலும் இது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், உதவி மற்றும் பலவற்றைப் பெற மணிக்கட்டை உயர்த்துவதன் மூலம் அதை செயல்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் யுஐ கொண்டு இயங்குகிறது.
கூகுளின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 40 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மோட்களுக்கான ஆதரவுடன் வருகிறது. இது நிகழ்நேரத்தில் புள்ளிவிவரங்களை வழங்க முடியும் மற்றும் அணிபவர் நிகழ்நேர வழிகாட்டுதலை பெறுவதோடு, ஓட்டங்களுக்கான கஸ்டம் திட்டங்களை உருவாக்கவும் அனுமதிக்கும்.
மேலும் இதய துடிப்பு இழப்பு கண்டறிதல் அம்சமும் இதில் உள்ளது இது பெயர் குறிப்பிடுவது போல செயல்படுகிறது. இது அணிபவரின் நாடித்துடிப்பை சரிபார்க்கிறது மற்றும் ஏதேனும் அசாதாரணம் ஏற்பட்டால் அவசர தொடர்புகள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ளலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட் வாட்சில் ஃபால் டிடெக்ஷன் அம்சமும் உள்ளது.
கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ககலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களின் அதே 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவ்விரு மாடல்களும் ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும்
பிக்சல் 10 ப்ரோ மாடல் ஆனது கூடுதலாக போர்சலைன் வேரியண்டிலும் வருகிறது. இந்த அனைத்து கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








