Home
Gadgets

விலையை பார்த்ததும் வாங்க தோணும்.. சைலன்ட் ஆக SALE க்கு வந்த Google-ன் லேட்டஸ்ட் Pixel வாட்ச்!

இதோ வந்துட்டேன் என்கிற பாணியில், கடந்த 2025 நவம்பர் 20 ஆம் தேதி அன்று அறிமுகமான கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிக்சல் வாட்ச் ({Pixel Watch) ஆனது "ஒருவழியாக" இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. எந்த மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

அது பிக்சல் வாட்ச் 4 (Pixel Watch 4) மாடல் ஆகும். தற்போது இது கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் (Google India online store) வழியாக வாங்க கிடைக்கிறது. விரைவில் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட பிற விற்பனை நிலையங்களின் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்று கூகிள் கூறுகிறது.

சைலன்ட் ஆக SALE க்கு வந்த Google-ன் லேட்டஸ்ட் Pixel வாட்ச்!

கூகுள் பிக்சல் வாட்ச் 4 அம்சங்கள் (Google Pixel Watch 4 Specifications Features): கூகுள் பிக்சல் வாட்ச் 4 ஆனது முந்தைய மாடலை போலவே கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இருப்பினும் பெசல்கள் மற்றும் பீக் ப்ரைட்னஸ் தொடர்பாக மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது. இது பிக்சல் வாட்ச் 3 உடன் ஒப்பிடும்போது 3,000 வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 16 சதவீதம் மெல்லிய பெசல்களுடன் ஆக்சுவா 360 ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்வாட்சை இயக்கும் வன்பொருளின் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. இது பிக்சல் வாட்சின் முந்தைய இரண்டு மடல்களில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 சிப்செட் உடன் தான் வருகிறது. இதற்காக கூகுள் எந்த புதிய அம்சங்களையும் சேர்க்கவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

கூகுளின் கூற்றுப்படி, பிக்சல் வாட்ச் 4 ஆனது ஸ்மார்ட் பதில்களுக்கான ஆதரவையும், ஜெமினை வாய்ஸ் அசிஸ்டென்ட்டிற்கான விரைவான அணுகலையும் கொண்டுள்ளது. மேலும் இது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், உதவி மற்றும் பலவற்றைப் பெற மணிக்கட்டை உயர்த்துவதன் மூலம் அதை செயல்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் யுஐ கொண்டு இயங்குகிறது.

கூகுளின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 40 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மோட்களுக்கான ஆதரவுடன் வருகிறது. இது நிகழ்நேரத்தில் புள்ளிவிவரங்களை வழங்க முடியும் மற்றும் அணிபவர் நிகழ்நேர வழிகாட்டுதலை பெறுவதோடு, ஓட்டங்களுக்கான கஸ்டம் திட்டங்களை உருவாக்கவும் அனுமதிக்கும்.

மேலும் இதய துடிப்பு இழப்பு கண்டறிதல் அம்சமும் இதில் உள்ளது இது பெயர் குறிப்பிடுவது போல செயல்படுகிறது. இது அணிபவரின் நாடித்துடிப்பை சரிபார்க்கிறது மற்றும் ஏதேனும் அசாதாரணம் ஏற்பட்டால் அவசர தொடர்புகள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ளலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட் வாட்சில் ஃபால் டிடெக்ஷன் அம்சமும் உள்ளது.

இந்தியாவில் கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் விலை விவரங்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் (Google Pixel Watch 4 Price and Color Options): பிக்சல் வாட்ச் 4 மாடல் ஆனது 2 அளவுகளில் வாங்க கிடைக்கிறது. 41மிமீ வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ.39,900 என்றும், அதே நேரத்தில் சற்றே பெரிய 45மிமீ வேரியண்ட்டின் விலை ரூ.43,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

41மிமீ வேரியண்ட் ஆனது ஐரிஸ், லெமன்கிராஸ், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள 45மிமீ வேரியண்ட் ஆனது மூன்ஸ்டோன், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வடிக்கையாளர்கள் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரை பார்வையிடலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Watch 4 now available to buy through Google India online store See Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X