வேற லெவல்.. IP68 ரேட்டிங்.. ஸ்னாப்டிராகன் W5.. 2 அளவுகளில் அறிமுகமான Google பிக்சல் வாட்ச் 3.. என்ன விலை?
கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் வாட்ச் 3 (google pixel watch 3) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த கூகுள் வாட்ச் வெளிவந்துள்ளது. 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், IP68 ரேட்டிங், 24 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் வாட்ச் 3 அம்சங்கள் (google pixel watch 3 Specifications): இந்த புதிய வாட்ச் ஆனது இரண்டு அளவுகளில் கிடைக்கும். அதாவது 41 மிமீ வைஃபை வெர்ஷன் (41mm Wi-Fi version) மற்றும் 45 மிமீ வைஃபை வெர்ஷன் (45mm Wi-Fi version) என இரண்டு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட ப்ரைட்னஸ் வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த புதிய வாட்ஸ் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் பிக்சல் வாட்ச் 3 ஆனது 100% மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு டிஸ்பிளேயின் பெசல்களைக் குறைத்து 41 மிமீ மாடலில் 10% அதிக உபயோகிக்கக்கூடிய இடத்தையும், 45 மிமீ பதிப்பில் 40% அதிக இடத்தையும் வழங்கி உள்ளது கூகுள் நிறுவனம்.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த புதிய கூகுள் பிக்சல் வாட்ச் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 உடன் கார்டெல் எம்33 பிராசஸர் உடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
உடல்நல கண்காணிப்புகளைப் பொறுத்தவரை, ஆப்டிகல் ஹார்ட் ரேட் (Optical Heart Rate), SpO2 மானிட்டர், இசிஜி (ECG), continuous EDA, ஸ்கின் டெம்பரேச்சர் (skin temperature) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த கூகுள் பிக்சல் வாட்ச் 3 மாடல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே சப்போர்ட் (Always-On Display Support) கொண்டுள்ளது இந்த புதிய கூகுள் வாட்ச். மேலும் 24 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் பேட்டரி சேவர் மோட்(Battery Saver mode) பயன்படுத்தினால் 36 மணி நேரம் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த புதிய வாட்ச் ஆனது ஃபிட்பிட் மார்னிங் ப்ரீஃபையும் (Fitbit Morning Brief) அறிமுகப்படுத்துகிறது. இது நீங்கள் விழித்த பிறகு முக்கியமான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அளவீடுகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Wear OS 5 மூலம் இந்த வாட்ச் இயங்குகிறது. பின்பு எல்டிஇ (LTE) ஆதரவு கொண்டுள்ள இந்த புதிய கூகுள் வாட்ச். பின்பு புளூடூத் LE ஆடியோ உடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.
41 மிமீ அளவுள்ள கூகுள் பிக்சல் வாட்ச் 3 விலை ரூ.39,900-ஆக உள்ளது. பின்பு இதன் 45 மிமீ அளவுள்ள மாடலின் விலை ரூ.43,900-ஆக உள்ளது. 41 மிமீ மாடல் மேட் பிளாக் (Matte Black), பாலிஷ் செய்யப்பட்ட சில்வர் (Polished Silver) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அதே சமயம் 45 மிமீ பதிப்பு மேட் பிளாக் (Matte Black), பாலிஷ்டு சில்வர் (Polished Silver) மற்றும் மேட் ஹேசல் (Matte Hazel) ஆகிய நிறங்களில் கிடைக்கும். பிக்சல் வாட்ச் 3 ஐ வாங்குவதன் மூலம் Google Fitbit Premium மெம்பர்ஷிப்பை ஆறு மாதங்களுக்கு வழங்குகிறது கூகுள் நிறுவனம்.
photo courtesy: engadget.com, google


Click it and Unblock the Notifications








