Home
Gadgets

Google Pixel Buds Pro 2: புது கலர் அறிமுகம்.. AI பீச்சர்கள் வருது.. சுடச்சுட வந்தாச்சு.. விலை எப்படி?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Pixel Buds Pro 2) மாடலில் புதிய கலர் வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. இதுபோக ஏஐ பவர்டு பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன. கூகுள் பட்ஸ் 2ஏ (Google Pixel Buds 2a) மட்டுமல்லாமல், இந்த மாடலுக்கும் அப்கிரேட் கிடைத்திருப்பதால், கஸ்டமர்கள் படு குஷியில் இருக்கின்றனர். இந்த பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) ஆகிய மாடல்கள் வந்துள்ளன. அதோடு‌ இந்த கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ (Google Pixel Buds 2a), கூகுள் பட்ஸ் ப்ரோ 2 (Google Buds Pro 2) மாடலின்‌ புது கலர் வெளியாகி உள்ளது.

Google Pixel Buds Pro 2: புது கலர் அறிமுகம்.. AI பீச்சர்கள் வருது!

பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 புது அம்சங்கள் (Pixel Buds Pro 2 New Features):
ஆகவே, மூன்ஸ்டோன் (Moonstone) கலர் அறிமுகமாகி இருக்கிறது. இந்த கலர் மட்டுமல்லாமல் ஏஐ பவர்ட் பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் அடாப்டிவ் ஆடியோ (Adaptive Audio) கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர் மூலம் மியூசிக் பிளே அல்லது பாட்காஸ்ட்டிங் போன்றவற்றின்போது உங்களது சரவுண்ட்டிங்களுக்கு ஏற்றபடி ஆடியோ அட்ஜஸ்ட் செய்யப்படும்.

கிரிஸ்டல் கிளியர் மற்றும் ரிச் ஆடியோ அனுபவனத்தை பெற்று கொள்ளலாம். மேலும் லவுட் நாய்ஸ் புரொடெக்சன் (Loud Noise Protection) சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் திடீரென ஏற்படும் லவுட் சவுண்ட் பாஸ்களில் இருந்து இது உங்களது காதுகளை பாதுகாக்கும். ஜெமினி லைவ் (Gemini Live) பீச்சர்களிலும் அப்கிரேட் கிடைத்து இருக்கிறது.

உங்களது வாய்ஸை எந்தவொரு சத்தமான இடத்திலும் டிடெக்ட் செய்யும்படி அப்கிரேட் கிடைத்துள்ளது. ஆகவே, வீட்டில் டிவி ஓடினாலும் சரி, பேமிலி மெம்பர்கள் சத்தமாக பேசினாலும் சரி உங்களது வாய்ஸ் கன்ட்ரோல்களை எளிதாக ஜெமினி லைவ் மூலம் செய்து கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் டெக்ஸ்ட்களை அனுக தலையை ஆட்டினால் போதுமானது.

கைகளை பயன்படுத்த வேண்டியது கிடையாது. இந்த அப்கிரேட்களுடன் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 கிடைக்க இருக்கிறது. மூன்ஸ்டோன் கலர் மட்டுமல்லாமல், ஹசல் (Hazel), பெயோனி (Peony), போர்ஸ்லைன் (Porcelain) மற்றும் விண்டர்கிரீன் (Wintergreen) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. ஏஐ பீச்சர்கள செப்டம்பரில் இருந்து அப்கிரேட் செய்யப்பட இருக்கின்றன.

பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 விலை (Pixel Buds Pro 2 Price): மூன்ஸ்டோன் கலர் வேரியண்ட்டின் விலை ரூ.19,900ஆக இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ.22,900ஆக இருக்கிறது. இந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் கூகுள் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் எதிர்பார்க்கலாம்.

இந்த மாடலில் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவி்ட்டி, சூப்பர் வைடுபேண்ட் கிடைக்கிறது. ஒவ்வொரு பட்டிலும் கூகுள் டென்சார ஏ1 (Google Tensor A1) சிப்செட் கிடைக்கிறது. ஏஎன்சி + சைலெண்ட் சீல் 2.0 கிடைக்கிறது. 30 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். ஏஎன்சி மோடில் 28 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Buds Pro 2 New Moonstone Colour Revealed With AI Features Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X