சும்மா கிழி.. மியூசிக்ல மிரட்டிய Google.. ஜெமினி AI.. 30 ஹவர்ஸ் பேக்கப்.. Pixel Buds Pro 2 அறிமுகம்!
இசை பிரியர்களை அறக்க பறக்கும் விதமாக மேட் பை கூகுள் 2024 இவென்ட்டில் (Made by Google 2024 Event) ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் டென்சார் ஏ1 சிப்செட், ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன், 30 மணி நேர பேக்கப், IP54 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 (Google Pixel Buds Pro 2) வெளியாகி இருக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 அம்சங்கள் (Google Pixel Buds Pro 2 Specifications): இந்த மாடலில் 11 மிமீ டிரைவர்கள் வருகின்றன. இந்த டிரைவர்களில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் சைலென்ட் சீல்டிஎம் 2.0 (Silent SealTM 2.0) சப்போர்ட் உள்ளது. ஆகவே, அவுட்டோரிலும் அல்ட்ரா கிளியர் ஆடியோ அவுட்புட் பெறலாம்.

இதுபோக டிரான்பரன்ஸி மோட் (Transparency Mode) மற்றும் கான்வர்சேஷன் டிடெக்சன் (Conversation Detection) சப்போர்ட் வருவதால், வாய்ஸ் மற்றும் மியூசிக் டிடெக்ட் பக்காவாக இருக்கும். இந்த பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் சார்ஜிங் கேஸில் ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) சப்போர்ட் உள்ளது. கூகுள் டென்சார் ஏ1 (Google Tensor A1) சிப் வருகிறது.
மேலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக கிளியர் காலிங் (Clear Calling), வாய்ஸ் ஆக்சிலரோமீட்டர் (Voice Accelerometer) சப்போர்ட் உள்ளது. இதுபோக பட்களில் விண்ட்-பிளாக்கிங் மெஸ் கவர்கள் (Wind-blocking Mesh Covers) வருகின்றன. ஆகவே, சைக்கிளிங், ரன்னிங் போன்ற நேரங்களிலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
இந்த மாடலில் மூன்று மைக்ரோபோன்கள் வருகின்றன. டேப் மற்றும் ஸ்வைப் டச் கன்ட்ரோல் வருகிறது. ஆகவே, மியூசிக், கால்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். இன்-இயர் டிடெக்சன் (in-ear Detection) சப்போர்ட் வருகிறது. இதன் மூலம் ஆட்டோமேட்டிக் பிளே மற்றும் பாஸ் செய்து கொள்ள முடியும்.

இதற்காக ஐஆர் பிராக்சிமிடி சென்சார் (IR Proximity Sensor) வருகிறது. அதேபோல மோஷன் டிடெக்டிங் மற்றும் கைரோஸ்கோப் சென்சார்களும் வருகின்றன. யுஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 1.5 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோடில் 8 மணி நேர பட்ஸ் பேக்கப் மற்றும் 30 மணி நேர சார்ஜிங் கேஸ் பேக்கப் கிடைக்கும். அதுவே ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட் ஆஃப் செய்யப்பட்டிருந்தால், 12 மணி நேர பட்ஸ் பேக்கப் மற்றும் 48 மணி நேர சார்ஜிங் கேஸ் பேக்கப் பெற்று கொள்ளலாம். இயர்பட்கள் 4.7 கிராம் எடை வருகிறது.
அதேபோல சார்ஜிங் கேஸ் 65 கிராம் எடை வருகிறது. இந்த கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் ஹைலைட் பீச்சராக ஜெமினி ஏஐ சப்போர்ட் உடன் வாய்ஸ் அசிஸ்டன்ட் வருகிறது. மேலும், பிக்சல் பட்ஸ் ஆப் (Pixel Buds App) சப்போர்ட் வருகிறது. ஈகியூ (EQ), சவுண்ட் மோட் (Sound Mode) போன்றவற்றை செய்து கொள்ளலாம்.
போர்செலைன் (Porcelain), ஹேசல் (Hazel), வின்டர்கிரீன் (Wintergreen) மற்றும் பியோனி (Peony) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஷிப்பிங் தொடங்குகிறது. ரூ.19,215ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications








