சும்மா கிழி.. ANC, ஸ்பாஷியல் ஆடியோ.. IP54 ரேட்டிங்.. 20 மணி நேர பேக்கப்.. Pixel Buds 2a சேலுக்கு ரெடி!
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ் 2ஏ (Pixel Buds 2a) விற்பனைக்கு வந்துவிட்டது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், ஸ்பாஷியல் ஆடியோ, டென்சார் ஏ1 சிப்செட், 20 மணி நேர பேக்கப் மற்றும் ஸ்வெட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான பிரீமியம் ஆடியோ பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடலின் விலை, விற்பனை பீச்சர்கள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்த இயர்பட்ஸ் இப்போதுதான் விற்பனைக்கு வந்துள்ளது. கூகுள் இந்திய ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.12,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ (No-cost EMI) சலுகையை கொடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட பேங்க் கார்டுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடலை ஐரிஸ் (Iris) மற்றும் ஹேசல் (Hazel) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சார்ஜிங் கேஸில் IPX4 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. அதேபோல இயர்பட்களில் IP54 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Sweat & Water Resistance) கிடைக்கிறது. மொத்தமாக 47.6 கிராம் எடை வருகிறது.
கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ அம்சங்கள் (Google Pixel Buds 2a Specifications): இந்த பிக்சல் பட்களில் 11 எம்எம் டைனாமிக் ஸ்பீக்கர் டிரைவர்கள் (Dynamic Speaker Drivers) கிடைக்கின்றன. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் சைலென்ட் சீல் 1.5 (Silent Seal 1.5) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கும்.
இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் நாய்ஸ் இல்லாமல், கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அவுட்புட் பெற்று கொள்ளலாம். இதுபோக டிரான்ஸ்பரன்ஸி மோட் (Transparency Mode) கிடைக்கிறது. இதுபோக சார்ஜிங் கேஸில் ரிங்டோன் ஸ்பீக்கர் (Ringtone Speaker) கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கரை ஃபைண்ட் ஹைப் (Find Hub) மூலம் அக்சஸ் செய்ய முடியும்.

இந்த பிக்சல் பட்ஸ் 2ஏ மாடலில் கூகுள் டென்சார் ஏ1 (Google Tensor A1) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0) முதல் லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வரையில் கனெக்டிவிட்டி கொடுக்கிறது. இதிலும் கூகுள் அக்கவுண்ட் மற்றும் இன்டர்நெட் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி உள்ளது.
மேலும், சூப்பர் வைடுபேண்ட் (Super Wideband) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்களில் விண்ட்-பேக் மெஸ் கவர்கள் (Wind-blocking Mesh Covers) கிடைக்கின்றன. அதேபோல ப்ளூடூத் சூப்பர் வைடுபேண்ட் மற்றும் கிளியர் காலிங் (Clear Calling) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் 2 மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. கேப்ஆகிடிவ் டச் (Capacitive Touch) சப்போர்ட் உள்ளது.
ஆகவே, டேப் மூலம் மியூசிக், கால்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட்டை (Voice Assistant) பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஐஆர் ப்ராக்சிமிட்டி சென்சார் (IR Proximity Sensor) கிடைக்கிறது. இதன் மூலம் இன்-இயர் டிடெக்சன் (in-ear Detection) கிடைக்கிறது. மேலும், சார்ஜிங் கேஸில் ஹால் எஃபெக்ட் சென்சார் (Hall Effect Sensor) கிடைக்கிறது. ஓப்பன் மற்றும் க்ளோஸ் டிடெக்சன் கிடைக்கிறது.
டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆப் செய்யப்பட்டு இருந்தால், 10 மணி நேரங்களுக்கு இயர்பட்களில் பேக்கப் கிடைக்கும். 27 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் மூலம் பேக்கப் கிடைக்கும். நாய்ஸ் கேன்சலேஷன் ஆன் செய்யப்பட்டால், 7 மணி நேரங்களுக்கு பட்களிலும் 20 மணி நேரங்களுக்கு கேஸ் மூலமும் பேக்கப் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








