4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன் விலையில்.. 27 மணிநேர பேட்டரி உடன் Google-ன் புதிய Pixel Buds 2a அறிமுகம்!
கூகுள் நிறுவனம் ஆனது 4 புதிய மாடல்களை உள்ளடக்கிய பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 அளவுகளிலான புதிய பிக்சல் வாட்ச் 4 மாடலுடன் சேர்த்து அதன் புதிய பிக்சல் பட்ஸ் 2ஏ (Google Pixel Buds 2a) இயர்பட்ஸ் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, கூகுளின் இந்த புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் ஆனது 27 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது (இதில் சார்ஜிங் கேஸ் பேட்டரியும் அடங்கும்). மேலும் இது சைலண்ட் சீல் 1.5 உடன் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனையும் ஆதரிக்கிறது.

கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ விலை: இந்தியாவில் கூகு ள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடல் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஹேசல் மற்றும் ஐரிஸ் ஆகிய 2 கலர்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். இதோடு சேர்த்து ரூ 22,900 விலையில் கிடைக்கும் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் புதிய மூன்ஸ்டோன் கலர் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ முழு அம்சங்கள்:
- 11மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- கூகுளின் டென்சர் ஏ1 சிப்
- சைலண்ட் சீல் 1.5 அம்சத்துடன் டிரான்ஸ்பரன்சி மோட் உட்பட தகவமைப்பு ஏஎன்சி ஆதரவு
- ஆக்டிவ் இன்-இயர் ப்ரெஷர் ரிலீஃப்
- ப்ளூடூத் 5.4
- டூயல் மைக்ரோஃபோன்ஸ்
- தெளிவான அழைப்பிற்காக காற்றை தடுக்கும் மெஷ் கோவ்கள்
- இன்-இயர் டிடெக்ஷன் ஆதரவுக்கான ஐஆர் ப்ராக்ஸிமிட்டி சென்சார்
- டச் கண்ட்ரோல்கள்
- மேக்நட் சார்ஜிங் கேஸில் ஓப்பன் மற்றும் க்ளோஸ் கண்டறிதலுக்கான ஹால் சென்சார்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- கேஸுடன் சேர்ந்து, ஏஎன்சி இல்லாமல் 27 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ஏஎன்சி இயக்கப்பட்டிருக்கும் போது 20 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ஏஎன்சி உடன் மற்றும் ஏஎன்சி இல்லாமல், ஒருமுறை சார்ஜ் செய்தால் முறையே 7 மணிநேரம் வரை மற்றும் 10 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- கேஸ் IPX4 (ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ்) கட்டமைப்பை கொண்டுள்ளது
- ஒவ்வொரு இயர்போனும் 4.7 கிராம் எடையை கொண்டுள்ளது
- ஹெட்செட் (கேஸுடன் சேர்த்து) 47.6 கிராம் எடையை கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ககலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களின் அதே 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவ்விரு மாடல்களும் ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும்
பிக்சல் 10 ப்ரோ மாடல் ஆனது கூடுதலாக போர்சலைன் வேரியண்டிலும் வருகிறது. இந்த அனைத்து கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் விலை: இந்தியாவில் கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் 41மிமீ (வைஃபை) வேரியண்ட் ஆனது ரூ.39,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்வாட்ச் ஆனது 45மிமீ அளவிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 43,900 ஆகும்.
41மிமீ வேரியண்ட் ஆனது ஐரிஸ், லெமன்கிராஸ், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்றும், மறுகையில் உள்ள 45மிமீ பிக்சல் வாட்ச் 4 வேரியண்ட் ஆனது மூன்ஸ்டோன், போர்சிலெய்ன் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








