Home
Gadgets

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 27 மணிநேர பேட்டரி, IP54 ரேட்டிங் உடன் Google பட்ஸ்!

கூகுள் (Google) நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக பிக்சல் 10ஏ (Pixel 10a) மாடல் வருகிற பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூகுள் அதன் பிக்சல் பட்ஸ் 2ஏ (Pixel Buds 2a) மாடலுக்கு 2 புதிய கலர் ஆப்ஷன்களை சேர்க்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ்ன்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, பிக்சல் பட்ஸ் 2ஏ ஆனது இரண்டு புதிய வண்ண ஆப்ஷன்களை பெறவுள்ளது. இவைகள் ஏற்கனவே உள்ள ஹேசல் மற்றும் ஐரிஸ் ஆப்ஷன்களுடன் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மேற்குறிப்பிட்ட 2 வண்ணங்களில் மட்டுமே வாங்க கிடைக்கிறது; விரைவில் மேலும் 2 வண்ணங்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 27 மணிநேர பேட்டரி, IP54 ரேட்டிங்!

கூகுள் நிறுவனம் "2 புதிய கலர் ஆப்ஷன்களின்" அதிகாரப்பூர்வ பெயர்களை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், புதிய கலர் ஆப்ஷன்கள் ஆனது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் கலர்களுடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் - ஃபாக் மற்றும் பெர்ரி என்று அழைக்கப்படலாம். ஃபாக் ஆப்ஷன் வெளிர் சாம்பல் நிறமாக இருக்கும்; பெர்ரி - மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

புதிய கலர் ஆப்ஷனை தவிர, வேறு எதுவும் மாறாது. அதாவது புதிய கலர்களில் வரும் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடல் ஆனது அதே டிசைன் மற்றும் ஹார்ட்வேர்களை கொண்டிருக்கும். விலை நிர்ணயத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. நினைவூட்டும்வண்ணம் இந்தியாவில் கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடல் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ இயர்பட்ஸ் மாடலின் விரிவான அம்சங்கள்:
- 11மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- கூகுளின் டென்சர் ஏ1 சிப்
- சைலண்ட் சீல் 1.5 அம்சத்துடன் டிரான்ஸ்பரன்சி மோட் உட்பட தகவமைப்பு ஏஎன்சி ஆதரவு
- ஆக்டிவ் இன்-இயர் ப்ரெஷர் ரிலீஃப்

- ப்ளூடூத் 5.4
- டூயல் மைக்ரோஃபோன்ஸ்
- தெளிவான அழைப்பிற்காக காற்றை தடுக்கும் மெஷ் கோவ்கள்
- இன்-இயர் டிடெக்ஷன் ஆதரவுக்கான ஐஆர் ப்ராக்ஸிமிட்டி சென்சார்
- டச் கண்ட்ரோல்கள்
- மேக்நட் சார்ஜிங் கேஸில் ஓப்பன் மற்றும் க்ளோஸ் கண்டறிதலுக்கான ஹால் சென்சார்

- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- கேஸுடன் சேர்ந்து, ஏஎன்சி இல்லாமல் 27 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ஏஎன்சி இயக்கப்பட்டிருக்கும் போது 20 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ஏஎன்சி உடன் மற்றும் ஏஎன்சி இல்லாமல், ஒருமுறை சார்ஜ் செய்தால் முறையே 7 மணிநேரம் வரை மற்றும் 10 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்

- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- கேஸ் IPX4 (ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ்) கட்டமைப்பை கொண்டு உள்ளது
- ஒவ்வொரு இயர்போனும் 4.7 கிராம் எடையை கொண்டுள்ளது
- ஹெட்செட் (கேஸுடன் சேர்த்து) 47.6 கிராம் எடையை கொண்டு உள்ளது.

கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a): இது பிப்ரவரி 2026 ல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாத வாக்கில் கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பிக்சல் மாடல் ஆனது வெளியாகி இருக்கும். ஆகவே இந்த ஆண்டும் அதை நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Buds 2a to get 2 new Color Options called Fog and Berry Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X