Home
Gadgets

மொத்த லேப்டாப் மார்க்கெட்டும் காலி! வந்தது GoogleBook.. Android OS, Gemini Intelligence உடன் இது வேற லெவல்ங்க!

கூகுள் (Google) நிறுவனமானது, லேப்டாப் மார்க்கெட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களின் வயிற்றுலும் புளியை கரைக்கும் படியான ஒரு வேலையை பார்த்துள்ளது . கூகுள் நிறுவனம், தனது லேப்டாப்களில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. க்ரோம்புக்கை (Chromebook) அறிமுகப்படுத்தி பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவனம் கூகுள்புக்கை (Googlebook) அறிவித்துள்ளது.

க்ரோம்எஸ்-க்கு (ChromeOS) பதிலாக, கூகுள் நிறுவனத்தின் புதிய கூகுள்புக் லேப்டாப்கள் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டமில் (Android-based operating system) இயங்கும் என்றும், இது கூகுளின் அதன் ஜெமினி இன்டெலிஜென்ஸை (Gemini Intelligence) பெருமளவில் ஒருங்கிணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வந்தது GoogleBook.. Android OS, Gemini Intelligence உடன்!

வழக்கமான க்ரோம் ப்ரவுஸரை வழக்கமான ஆண்ட்ராய்டு ஆப்களுடன் இணைப்பதே இதன் அடிப்படை யோசனையாகும். இதில் மிகவும் கவனிக்கத்தக்க மாற்றம் என்னவென்றால் - நீங்கள் மவுஸுடன் செயல்படும் விதத்தில் உள்ளது. கூகுளும் டீப்மைண்டும் (DeepMind) இணைந்து 'மேஜிக் பாயிண்டர்' (Magic Pointer) என்கிற ஒரு அம்சத்தை உருவாக்கி உள்ளன.

உங்கள் கர்சரை நீங்கள் அசைத்தால், உங்கள் ஸ்க்ரீனில் உள்ளவற்றின் அடிப்படையில் சூழலுக்கு ஏற்ற செயல்களை வழங்க ஜெமினி தோன்றும். உதாரணமாக, ஒரு இமெயிலில் உள்ள தேதியை குறிப்பதன் மூலம் ஒரு காலண்டர் ஈவென்ட்-ஐ கிரியேட் செய்யலாம் அல்லது இரண்டு படங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை விஷூவல் ஆக ஒன்றிணைக்கலாம். இது வழக்கமான கிளிக் செய்வதிலிருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையாகும்.

இதில் ப்ராம்ப்ட் அடிப்படையிலான விட்ஜெட் மேக்கரும் (Prompt-based widget maker) அடங்கும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் டைப் செய்யலாம். அதை தொடர்ந்து ஜெமினி உங்கள் கூகுள் ஆப்கள் அல்லது இணையத்திலிருந்து தகவல்களை பெற்று ஒரு கஸ்டம் விட்ஜெட்டை (Custom Widget) உருவாக்கும். நீங்கள் ஒரு பயணத்தை திட்டமிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் விமான விவரங்களையும் ஹோட்டல் முன்பதிவுகளையும் உங்கள் ஸ்க்ரீனில் ஒரே தற்காலிக இடத்தில் சேகரிக்கும்.

இது ஆண்ட்ராய்டில் இயங்குவதால், இந்த ஓஎஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் (Android Smartphones) நெருக்கமாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மெசேஜிற்கு பதிலளிக்க அல்லது ஒரு விரைவான பணியை முடிக்க, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களை லேப்டாப் ஸ்க்ரீனில் ஓப்பன் செய்யலாம்.

இது 'குவிக் அக்சஸ்' (Quick Access) என்ற அம்சத்தையும் வழங்குகிறது. இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபைல்களை முதலில் கிளவுடிற்கு மாற்ற தேவை இல்லாமல் (transfer them to cloud), லேப்டாப்பின் ஃபைல் மேனேஜரில் (File manager) இந்து நேரடியாக அவற்றை பிரவுஸ் செய்யலாம்.

இந்த ஹார்ட்வேரை உருவாக்குவதற்காக கூகுள் நிறுவனம் - ஏசர், ஆசஸ், டெல், ஹெச்பி மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்பது கூடுதல் சுவாரசியம். இந்த லேப்டாப்கள் உயர்தரப் பொருட்களை பயன்படுத்தும் என்றும், சாதாரண க்ரோம்புக்குகளில் இருந்து இவற்றை வேறுபடுத்தி காட்டுவதற்காக ஒரு க்ளோபாரை (Glowbar) கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் புதிய கூகுள்புக் லேப்டாப்பின் விலை மற்றும் அறிமுகம்: கூகுள் புக் லேப்டாப்பின் விலை அல்லது சரியான வெளியீட்டு தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை, ஆனால் இதுகுறித்து இந்த ஆண்டின் (அதாவது 2026 ஆம் ஆண்டின்) பிற்பகுதியில் கூடுதல் விவரங்கள் வரும் என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Google New Laptop Announced GoogleBook With Android OS and integrates With Gemini Intelligence
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X