பட்ஜெட் விலையில் அசத்தலான கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்.! சிறப்பம்சங்கள்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது.

தற்சமயம் இந்நிறுவனம் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக மேம்பட்ட கூகுள்அசிஸ்டண்ட் சேவையுடன் கிடைக்கும் இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தைவழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நெஸ்ட் மினி ஸ்பீக்கர் ஆனது கூகுள் ஹோம் மின மாடலை விட இருமடங்கு சக்திவாயந்தது, இதன் ஹார்டுவேரை சிறப்பான வகையில் பயன்படுத்த ஏதுவாக ஆடியோ டியூனிங் மென்பொருளை கூகுள் பொறியாளர்கள் சிறப்பாக உருவாக்கி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நெஸ்ட் மினி ஸ்பீக்கர் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற சத்தத்தை அசிஸ்டண்ட் தானாக கண்டறிந்து அதற்கேற்ற செட்டிங்களை இயக்கும்.

இந்த சாதனத்தில் உள்ள பிராக்சிமிட்டி வாடிக்கையாளர் கைகளை அருகில் கொண்டு செல்லும் போது தானாக எல்இடி-யை இயக்க வழி செய்கிறது. இதை கொண்டு ஆடியோ எவ்வாறு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள முடியும். ஹோம் மினி போன்றே இந்த நெஸ்ட் மின ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனமும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

கூகுள் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாக் மற்றும் சார்கோல் என இருவித நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.4,499- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications