Home
Gadgets

360 டிகிரி ஆடியோ.. ஜெமினி லைவ்.. வாய்ஸ் மேட்ச் டெக்.. புது Google ஹோம் ஸ்பீக்கர்.. விலை எப்படி?

ஸ்மார்ட்போனில் ஏஐ அசிஸ்டன்ட் பயன்படுத்திவர்களுக்கு ஸ்பீக்கரில் ஏஐ அசிஸ்டன்ட் பயன்படுத்துவது சுலபமான காரியமாக இருக்கிறது. இதனாலேயே, ஏஐ அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது, கூகுள் நிறுவனமானது, 360 டிகிரி ஆடியோ, வாய்ஸ் மேட்ச் டெக்னாலஜி, ஜெமினி லைவ் உள்ளிட்ட பீச்சர்களுடன் கூகுள் ஹோம் ஸ்பீக்கரை (Google Home Speaker) அறிமுகம் செய்துள்ளது.

நேச்சுரல் ஸ்பீக்கரிங், நேட்டிவ் ஸ்பீக்கிங் மட்டுமல்லாமல், லாஜிக் பேஸ்டு பதில்களை கொடுக்கும்படி இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கரை களமிறங்கி இருக்கிறது. ஜெமினி கிடைப்பதால், மல்டி-ஸ்டெப் கேள்விகளுக்கும் பதில்களை கொடுக்கும்படி பில்ட் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம் மாடலாக இருப்பதால், இதற்கான பிரத்யேக அப்கிரேட்களையும் கொடுத்து இருக்கிறது.

360 டிகிரி ஆடியோ.. ஜெமினி லைவ்.. வாய்ஸ் மேட்ச் டெக்.. Home ஸ்பீக்கர்!

ஆகவே, கூகுள் ஹோம் பிரீமியம் (Google Home Premium) கிடைக்கும். ஜெமினி லைவ் (Gemini Live) கிடைக்கும். நெட்ஸ் கேமரா (Nest Camera) ஆக்டிவிட்டியை தெரிந்து கொள்ள கேமரா ஹிஸ்டரி சர்ச் (Camera History Search), ஹோம் ஆக்டிவிட்டிகளை ஒருகிணைக்க ஹோம் பிரீஃப் (Home Brief) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கர் பேக் செய்துள்ளது.

ஏஐ பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஆடியோ அவுட்புட் கொடுக்க 360 டிகிரி ஆடியோ சப்போர்ட் கொடுக்கிறது. இதில் ஸ்பாஷியல் ஆடியோவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் டிவி ஸ்ட்ரீமிங் சப்போர்ட் கொடுக்கும். ஆகவே, ஸ்பாஷியல் சரவுண்ட் சவுண்ட் (Spatial Surround Sound) கொடுக்க பயன்படுத்தி கொள்ளலாம். பிரீமியம் பில்ட் குவாலிட்டி கொடுக்கிறது.

3டி-க்நிட் பேபரிக் எக்ஸ்டீரியர் (3D-knit Fabric Exterior) கொடுத்துள்ளது. பிரைவசி கன்ட்ரோலுக்காக மைக்ரோபோன் மியூட் ஸ்விட்ச் (Microphone Mute Switch) கிடைக்கிறது. வாய்ஸ் ரிககனைசேஷன் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரைவசி மற்றும் செக்யூரிட்டி பீச்சர்கள் என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளன.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர் அம்சங்கள் (Google Home Speaker Specifications): குவாட் கோர் ஏ55 (Quad-core A55) ப்ராசஸர் கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது. 3.4 இன்ச் உயரம் மற்றும் 4.2 இன்ச் சுற்றளவு கொண்டுள்ளது. 30W பவர் அடாப்டர் சப்போர்ட் கொடுக்கிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் பெற்று கொள்ளலாம்.

ஓம்னி டைரெக்சனல் சவுண்ட் (Omni-directional Sound) சப்போர்ட் கொண்ட 58 மிமீ ஃபுல் ரேஞ்ச் டிரைவர்கள் கிடைக்கின்றன. 3 மைக்ரோபோன்களை இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கர் கொடுத்து இருக்கிறது. 3 டச் கன்ட்ரோல்கள் மற்றும் 2 ஸ்டேஜ் ஹார்ட்வேர் மியூட் ஸ்விட்ச் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. வழக்கமாக வாய்ஸ் கான்ட்ரோல்களையும் செய்து கொள்ளலாம்.

ஹோம் பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஜெமினி ஹோம் கிடைக்கிறது. வாய்ஸ் மேட்ச் சப்போர்ட் கிடைக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் த்ரெட் 1.3 (Thread 1.3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் ஹோம் மட்டுமல்லாமல், மேட்டர் ஹப் (Matter Hub) கேபபிலிட்டி கிடைக்கிறது. கூகுள் ஹோம் ஆப் வழியாக இதை அணுக முடியும்.

இந்த கூகுள் ஹோம் ஸ்பீக்கரின் விலை 99.99 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.9,434ஆக இருக்கிறது. வருகிற ஜூன் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஹேசல் (Hazel), போர்ஸ்லைன் (Porcelain) உள்ளிட்ட கலர்களில் கிடைக்க இருக்கிறது. யுஎஸ் மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Google Home Speaker With Gemini Live 360 Degree Audio Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X