அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியுடன் வரும் கூகுள் ஹோம்.!

இந்த இரண்டு பொருட்களும் இசை, வீடியோ, ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோ, செய்திகளை தெரிந்து கொள்வது மற்றும் பல விஷயங்களுக்கு மிக எளிமையாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

|

கூகுள் ஹோம் மாற்றும் கூகுள் ஹோம் மினி என்ற இரண்டு வகை ஸ்பீக்கர்கள் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதமே கூகுளின் இந்திய விநியோகிஸ்த பார்ட்னர் ரெடிங்டன் இந்தியா நிறுவனம் இந்த இரண்டு வகை ஸ்பீக்கர்கள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பின்படி இந்த இரண்டு பொருட்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை கூகுள் நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், இந்த இரண்டு பொருட்களையும் விற்பனை செய்வதோடு இதன் சிறப்பு அம்சங்களையும் விவரித்துள்ளது.

அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியுடன் வரும் கூகுள் ஹோம்.!

பிளிப்கார் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த கூகுள் ஹோம் மற்றும் கூகுள் மினி ஹோம் ஆகிய ஸ்மார்ட் ஸ்பீக்கரகள் மூலம் கூகுள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இணைகிறது. இந்த கூகுள் மினி ஸ்பீக்கர் போல் சமீபத்தில் வெளியான அமேசான் எக்கோ டாட், கூகுள் அசிஸ்டெண்ட் போல் தனியாக வீட்டில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இருந்து வருகிறது. இந்த பொருள் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான நிலையில் தற்போது அதேபோல் கூகுளும் வெளியிட்டுள்ளது.


அமேசான் எக்கோ, எக்கோ டாட், எக்கோ பிளஸ் ஆகியவைகளுக்கு பின் சில மாதங்கள் கழித்து கூகுள் தனது தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது. அமேசான் எக்கோ, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் முறையில் பயன்படுத்தப்படும் நிலையில் கூகுள் ஹோம், கூகுள் அசிஸ்டெண்ட் பாணியில் பயன்படுத்தப்படவுள்ளதால் எளிதில் மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியுடன் வரும் கூகுள் ஹோம்.!

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களும் இசை, வீடியோ, ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோ, செய்திகளை தெரிந்து கொள்வது மற்றும் பல விஷயங்களுக்கு மிக எளிமையாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் தங்கள் விபரங்களை ரிஜிஸ்டர் செய்து இந்த பொருட்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த விபரங்கள் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்காது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

வாய்ஸ் அங்கீகார டெக்னாலஜியில் இந்த கூகுள் ஹோம் செட்டிங்ஸ் இருப்பதால் வாடிக்கையாளர்களை விரைவில் கவரும் வகையில் உள்ளது. ஒருமுறை வாடிக்கையாளரின் குரலை பதிவு செய்து கொண்டால் போதும், அதன் பின்னர் அந்த குரல் இடும் கட்டளைகளை செவ்வனே செய்து முடிக்கும். இசை கேட்பதற்கு மட்டுமின்றி தேடுதளத்தில் நீங்கள் விரும்புவதை குரல் கட்டளை மூலம் செய்து கொடுக்கும்.

அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியுடன் வரும் கூகுள் ஹோம்.!

இந்த கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி பொருட்களின் விலை குறித்து பிளிப்கார்ட் இன்னும் தகவலை தெரிவிக்கவில்லை. இருப்பினும் கூகுள் மினி ரூ.8400 ஆகவும், ஹோம் மினி ரூ.3200ஆகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் பிளிப்கார்ட் மூலம் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதா? அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறையிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதா? என்பது குறித்த தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Google Home, Home Mini Listed on Flipkart, India Launch Confirmed for April 10 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X