புளூடூத் ஸ்டிரீமிங்: கூகுள் ஹோம் அளித்திருக்கும் புதிய வசதி.!

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சியர்ச் இஞ்சின் இணையதளமான கூகுள் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து அசத்தி வரும் நிலையில் தற்போது புதிய புளூடூத் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் ஸ்டிரீமிங்: கூகுள் ஹோம் அளித்திருக்கும் புதிய வசதி.!

கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் குறித்து நாம் அனைவரும் தெரிந்திருப்போம். தற்போது இதில் புளூடூத் ஸ்டிரிமிங் வசதியையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஆடியோவை சாதாரணமாக பரிமாற்றம் செய்ய உதவும் புளூடூத் தற்போது கூகுள் அசிஸ்டெண்ட் சாப்ட்வேரிலும் உபயோகப்படுத்தும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இதுவொரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய செட்டிங் மெனு சென்று அதில் உள்ள 'Pared Bluetooth Devices' என்ற ஆப்சனை தேர்வு செய்து அப்டேட் செய்தால் புளூடூத் வசதியை பயன்படுத்தலாம். இந்த புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களில் ஆடியோவை ஸ்பீக்கர்கள் மூலம் பரிமாறி கொள்ளலாம்.

மேலும் கூகுள் ஹோம் சாப்ட்வேரில் ஆறுவிதமான குரல்களை வேறுபடுத்தி அதன் கட்டளைகளை உடனடியாக செய்து முடிக்கும். ஆனால் ஒரே நேரத்தில் ஆறு குரல்களும் கட்டளையிட்டால் வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது

கேள்விகளுக்கான பதில், மியூசில் பிளே செய்வது, ஹோம் டெக்னாலஜியை கண்ட்ரோல் செய்வது ஆகியவற்றை வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் எளிதில் செய்து கொள்ளலாம். கூகுள் பிக்சல் போன்களில் இருக்கும் இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட் போல செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

கேள்விகளுக்கு பதில் சொல்வது மட்டுமின்றி தட்பவெப்ப நிலை குறித்த தகவல், டிராபிக் நெருக்கடி குறித்த தகவல், ஷெட்யூல்களை ஞாபகப்படுத்துவது என பல்வேறு உதவிகளை கூகுள் ஹோம் நமக்கு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்த கூகுள் ஹோமில் தற்போது புளுடூத் வசதியும் இணைந்துள்ளது கூடுதல் வசதி என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லை

Best Mobiles in India

Read more about:
English summary
Google's voice-activated assistant, Google Home now carries support for Bluetooth streaming.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X