Home
Gadgets

சும்மா கிழி.. AMOLED டிஸ்பிளே.. 7 நாட்களுக்கு பேட்டரி.. Google ஹெல்த், GPS.. எந்த மாடல்?

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 (Apple Watch Series 12) மாடல்களைவிட 45 சதவீத லைட் வெயிட் மாடலாக கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் (Google Fitbit Edge) களமிறங்கி இருக்கிறது. ஜிபிஎஸ் மட்டுமல்லாமல், சிங்கிள் சார்ஜில் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. கூகுள் ஹெல்த் சப்போர்ட் கொண்ட இந்த கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

குளோபல் மார்கெட்டில் கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் வெளியாகி இருக்கிறது லைட் வெயிட் மாடலை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. வெறும் 17.7 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளது. இருப்பினும், பேட்டரி, பில்ட் குவாலிட்டி மற்றும் பீச்சர்களில் எந்த குறையும் வைக்கவில்லை. முதலில் முழு பீச்சர்களை தெரிந்து கொண்டு விலை விவரங்களுக்கு செல்லலாம்.

சும்மா கிழி.. AMOLED டிஸ்பிளே.. 7 நாட்களுக்கு பேட்டரி.. Google ஹெல்த்!

கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் அம்சங்கள் (Google Fitbit Edge Specifications): 1.34 இன்ச் அமோலெட் கலர் டிஸ்பிளே (AMOLED Color Display) கொடுத்துள்ளது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாக இருக்கிறது. பேக்லிட் (Backlit) மற்றும் அட்ஜஸ்டபிள் பிரைட்னஸ் (Adjustable Brightness) சப்போர்ட் கொடுக்கிறது. 65mAh பேட்டரி கிடைக்கிறது.

இது கிட்டத்தட்ட சில இயர்பட்ஸ்களில் கிடைக்கும் கேபாசிட்டியாக இருக்கிறது. இதிலேயே 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. ஆகவே, எவ்வளவு லைட் வெயிட் மாடலாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இதுவொரு லித்தியம் அயன் பேட்டரியாக இருக்கிறது. 100 சதவீத சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் தேவைப்படும். ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

ஆகவே, 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 1 நாளுக்கு தேவையான பேட்டரி பேக்கப் கிடைக்கும். பேட்டரி வெயிட் மட்டும் 1.35 கிராமாக இருக்கிறது. மொத்த வெயிட் 17.7 கிராமாக உள்ளது. இதில் ஸ்ட்ராப் சேர்க்கப்படவில்லை. ஆம்பிக் ஏபி5 எம்சியூ (Ambiq AP5 MCU) சிப்செட் கொண்ட மாடலாக இந்த கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் கிடைக்க இருக்கிறது.

கன்ட்ரோல்களுக்காக மெக்கானிக்கல் சைடு பட்டன் (Mechanical Side Button) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் ஹெல்த் கோச் (Google Health Coach) கிடைக்கிறது. 40+ எக்சர்சைஸ் மோட்கள் ஆட்டோ டிடெக்ட் செய்து கொள்ளப்படும். ஹார்ட் ரேட், பிளட் பிரசர், ஸ்லீப், ஸ்கின் உள்ளிட்டவை மானிட்டரிங் செய்யப்படும். இதற்கான ஏகப்பட்ட சென்சார்கள் கிடைக்கின்றன.

ஆப்டிகல் பிபிஜி (Optical PPG) சென்சாருடன் மல்டிபர்பஸ் எலக்ட்ரிகல் சென்சார் (Multipurpose Electrical) சென்சாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஸ்பிஓ2 (SpO2) சென்சார் கிடைக்கிறது. மேலும், ஸ்கின் டெம்ப்ரேச்சர் (Skin Temperature), அல்டிமீட்டர் (Altimeter), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மொபைல் நோட்டிபிகேஷன் கொடுக்கப்படும். ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மட்டுமல்லாமல், ஜிபிஎஸ் (GPS) மற்றும் கலிலியோ (Galileo) கனெக்டிவிட்டிகளையும் இந்த கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் மாடல் கொடுக்கிறது. 5 ATM ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பல்வேறு பேண்ட் (Band) ஆப்ஷன்களை கொடுத்துள்ளது

ஆகவே, மேட் பிளாக் அலுமினியம் பாடியில் அப்சிடியன் பேண்ட், சாடின் சில்வர் அலுமினியம் பாடியில் ஃபாக் பேண்ட், சாடின் பைரைட் அலுமினியம் பாடியில் ஆலிவ் பேண்ட் மற்றும் ஷேம்பெயின் கோல்ட் பாடியில் கேன்யன் பேண்ட் ஆகியவை ஆப்ஷனில் இருக்கின்றன. இந்த கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் மாடலின் விலை 219.99 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

இந்திய மதிப்பில் ரூ.21,011ஆக இருக்கிறது. வருகிற அக்டோபர் 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. முதலில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு கூகுள் ஹெல்த் பிரீமியம் கிடைக்கிறது. கூகுள் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் விரைவில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Google Fitbit Edge With 7 Days Battery Life AMOLED Display GPS Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X