ஆப்பிள் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.!

    கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களின் விற்பனை அண்மையில் இந்திய சந்தையில் சூடு பிடித்துள்ளது.

    ஆப்பிள் ஏர்போட்ஸ் vs கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.!

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ் மற்றும் ஜப்ரா நிறுவனத்தின் எலீட் ஆக்ட்டிவ் 65டி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    ட்ரு ஹெட்போன்ஸ்

    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் இல் ஹெட்போன் இன் ஆடியோ ஜாக்களை நீக்கி ஏர்போட்ஸ் சேவையை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அதிகப்படியான நிறுவனம் ட்ரு ஹெட்போன்ஸ் தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியது.

    கூகுள் & அமேசான் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

    தற்பொழுது கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இருநிறுவனங்களும் இணைந்து 2019 ஆம் ஆண்டில் நிச்சயம் தனது புது ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ்களுக்கு போட்டியாக வெளியிடுமென்று அறிவித்துள்ளது.

    கோர்ட்டெக் மற்றும் யூனிடெக் நிறுவனம்

    அமேசான் மற்றும் கூகுள் இணைந்து உருவாகும் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களின் ரிஜிட்-பிளக்ஸ் பி.சி.பி போர்டுகளை கோர்ட்டெக் மற்றும் யூனிடெக் நிறுவனம் வடிவமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தந்து புதிய ஏர் போட்ஸ்களை 2020 இல் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்பார்ப்பு

    ஆண்ட்ராய்டு சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கென்று தனி செல்வாக்கு இருக்கின்றது, அதேபோல் வாய்ஸ் அசிட்டேன்ட சேவை வழங்கும் அமேசான் நிறுவனத்திற்கும் தனி இடமிருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாகவிருக்கும் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Google and Amazon planning truly wireless headphones to challenge AirPods : Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more