Home
Gadgets

உங்க வீட்டு பழைய டிவிக்கு டாட்டா.. சர்ர்னு சரிந்த 55-இன்ச் 4K Google TV விலை.. தெறிக்கும் 20W டால்பி அட்மாஸ்!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் பிரபலமாக தொடங்கிய காலத்தில் வாங்கிய பழைய 32-இன்ச் மாடலை வைத்துக்கொண்டு "வண்டி ஒட்டிக்கொண்டு இருக்கும்" பலரில் நீங்களும் ஒருவரா? வாங்குறதே வாங்குறோம் - கொஞ்சம் பெரிய 55-இன்ச் மாடலுக்கு அப்கிரேட் ஆக வேண்டுமென்கிற ஐடியா உங்களிடம் உள்ளதா? ஆம் என்றால் "இந்த விலை குறைப்பு" உங்களுக்கானதாக இருக்கலாம்.

சோனி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பிராவியா சீரீஸின் கீழ் அறிமுகமான ஒரு 55-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை - முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. அது சோனி பிராவியா 2எம்2 சீரீஸ் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் (Sony BRAVIA 2M2 series 55-inch 4K Ultra HD Smart Google TV - K-55S25BM2 ) ஆகும்.

சர்ர்னு சரிந்த 55-இன்ச் 4K Google TV விலை!

இது விலை அதிகம் உள்ள ஓஎல்இடி டிவியை வாங்காமல் - சினிமா விஷூவல்ஸ், மென்மையான கூகுள் டிவி அனுபவம் மற்றும் நம்பகமான பிராண்ட் ஆதரவு ஆகியவற்றை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு - மிட்-பிரீமியம் ஸ்மார்ட் டிவி ஆன ஸ்மார்ட் டிவி ஆகும்.

மேலும் இந்த மாடலில் சோனியின் பட செயலாக்கம் ஆனது நவீன ஸ்மார்ட் டிவி தளத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதால் - ஓடிடி ஸ்ட்ரீமிங் (OTT streaming), ஸ்போர்ட்ஸ் (Sports) மற்றும் கன்சோல் கேமிங் (Console gaming) போன்ற மிக்ஸ்டு பயன்பாட்டிற்கும் (Mixed usage) ஏற்றதாக அமைகிறது.

என்ன விலை? சோனி பிராவியா 2எம்2 சீரீஸின் அறிமுகமான 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் அசல் அறிமுக விலை ரூ.57,990 ஆகும். இருப்பினும் தற்போது இந்த டிவி மீது - எச்டிஎப்சி கிரெடிட் கார்டு நோ காஸ்ட் இஎம்ஐ உடன் ரூ.7,000 வரை கூடுதல் தள்ளுபடி மற்றும் ரூ.1,500 தள்ளுபடி கூப்பன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குறிப்பிட்ட மாடலின் விலையை ரூ.49,490 க்கு கொண்டுவர முடியும்.

என்னென்ன அம்சங்கள்? சோனியின் பிராவியா 2எம்2 சீரீஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பிரீமியம் அம்சங்களால் நிரம்பி உள்ளது. இது 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் உடன் 60 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த டிவி - ப்ராசஸர் எக்ஸ்1, லைவ் கலர், 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ, மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர் 100 மற்றும் எச்டிஆர் 10 / எச்எல்ஜி ஆகிய ஆதரவு ஆகிய அம்சங்களின் கலவையால் ஷார்ப் ஆன 4கே எல்இடி பேனலை உறுதி செய்கிறது.

கூடவே "மேற்கண்ட அம்சங்கள்" - திரைப்படங்கள், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்ற விரிவான, துடிப்பான, மென்மையான மற்றும் உயர் டைனமிக் ரேன்ஜ் காட்சிகளை வழங்குகிறது. இந்த டிவி 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்களை கொண்டுள்ளது. சிறந்த விஷயம் என்னவென்றால், இது கேமிங் கன்சோல்களையும் ஆதரிக்கிறது. இது டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட்டுடன் 20W டால்பி அட்மாஸையும் ஆதரிக்கிறது.

இந்த டிவியில் கூகு ள் டிவி, வாட்ச்லிஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் காஸ்ட் மற்றும் கூகுள் மெனு போன்ற அனைத்து அத்தியாவசிய ஸ்மார்ட் கிட்களும் உள்ளன. மேலும் இது ஆப்பிள் ஏர்ப்ளே 2, ஆப்பிள் ஹோம் கிட் மற்றும் அலெக்சாவையும் ஆதரிக்கிறது. மேலும் டிவியை வாங்கிய தேதியிலிருந்து சோனி 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. அறிமுகமானதில் இருந்து இவ்வளவு குறைந்த விலைக்கு விற்கப்பட்டது இல்லை என்பதால் ஆர்வமுள்ளவர்கள் சோனியின் பிராவியா 2எம்2 சீரீஸ் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவியை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Goodbye old to 32 inch 43 inch TV This Sony 55 inch Bravia 4K Google TV Selling At Its Lowest Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X