எதிலும் வித்தியாசம்.. இதை பார்த்தா கண்டிப்பா புதிய Nothing Ear Stick வாங்குவீங்க! விலை இதோ!

|

Nothing Ear Stick இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்ஸ்டிக் நவம்பர் 4 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் தூசி, நீர் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP54 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. குறைந்த எடை நீடித்த பேட்டரி ஆயுள் என பல மேம்பட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது இந்த இயர்பட்ஸ். இதன் விலை மற்றும் பிற விவரங்களை பார்க்கலாம்.

நத்திங் இயர் ஸ்டிக்

நத்திங் இயர் ஸ்டிக்

நத்திங் இயர் ஸ்டிக் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிற இயர்பட்ஸ்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் எடை குறைவானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

நத்திங் இயர் ஸ்டிக் இயர்பட்ஸ்களானது ஒரே சாரஜிங் இல் 7 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதேபோல் இயர்பட்ஸ் கேஸ் 29 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் விற்பனையானது நவம்பர் 4 முதல் தொடங்குகிறது. ஆனால் இந்த இயர்பட்ஸ்களை இப்போதே முன்பதிவு செய்யலாம்.

புதிய இயர்பட்ஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

புதிய இயர்பட்ஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்பிரிங் சம்மர் 2023 ஃபேஷன் ஷோவில் நத்திங் இயர்பட்ஸ் குறித்து டீஸ் செய்யப்பட்டது. அப்போது இருந்தே இந்த இயர்பட்ஸ் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. தனித்துவமான வடிவமைப்புக் கொண்டிருக்கும் இந்த இயர்பட்ஸ் ப்ரீமியம் ரகத்தை சார்ந்தது. எனவே இதன் விலையும் சற்று அதிகமாகத் தான் இருக்கிறது.

புதிய இயர்பட்ஸ் விலை இதுதான்

புதிய இயர்பட்ஸ் விலை இதுதான்

அதாவது இந்த இயர்பட்ஸ் விலை ரூ.8499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இது மிகவும் எடை குறைந்த இயர்பட்ஸ் ஆகும். அதாவது இதன் எடை 4.7 கிராம் ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விலை

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விலை

இதன் விலை ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை இதன் விலை EUR 119 (தோராயமாக ரூ.9800) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் இதன் விலை $99 (தோராயமாக ரூ.8100) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.8499 ஆக இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது வைட் வண்ண மாறுபாட்டில் கிடைக்கிறது.

இயர் ஸ்டிக் சிறப்பம்சங்கள்

இயர் ஸ்டிக் சிறப்பம்சங்கள்

நத்திங் இயர் ஸ்டிக் ஆனது பல்வேறு மேம்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. பிற இயர்பட்ஸ்களுடன் ஒப்பிடும் போது இது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் பாக்ஸ் ஆனது வழக்கமான ஃபிளிப் ஓப்பனிங் போல் அல்லாமல் ட்விஸ்ட் ஓப்பனிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

பல்வேறு மேம்பட்ட சென்சார்கள்

பல்வேறு மேம்பட்ட சென்சார்கள்

நத்திங் இயர் ஸ்டிக் இயர்பட்ஸ்கள் 12.6மிமீ டைனமிக் டிரைவர்கள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது டஸ்ட், வாட்டர் மற்றும் வியர்வை எதிர்ப்புக்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது. காதுகளைக் கண்டறிதல் அம்சம் இதில் இருக்கிறது. அதாவது காதில் இதை பொறுத்தும் போது தானாக இந்த இயர்பட்ஸ் கண்டறியும்.

29 மணிநேர பேட்டரி ஆயுள்

29 மணிநேர பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள் குறித்து பார்க்கையில், இந்த இயர்பட்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணிநேரம் கேட்கும் நேரம் மற்றும் 3 மணிநேரம் பேசும் நேரம் உள்ளிட்ட நீடித்த ஆயுளை வழங்குகிறது. அதேபோல் இந்த இயர்பட் கேஸ் 29 மணிநேர கேட்கும் நேரத்தையும், 12 மணிநேர பேச்சு நேரத்துக்கான பேட்டரி ஆயுளை வழங்கும். யூஎஸ்பி டைப்-சி கேபிள் மூலம் இதை சார்ஜ் செய்யலாம்.

விரைவில் விற்பனை தொடங்கும்

விரைவில் விற்பனை தொடங்கும்

இந்த இயர்பட்கள் நத்திங் எக்ஸ் ஆப்ஸ்க்கு இணக்கமானது. இந்த இயர்பட்கள் நத்திங் போன் 1 உடன் சிரமமின்றி இணைக்கலாம். ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன், பாஸ் லாக் தொழில்நுட்பம் என பல ஆதரவுகள் இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் நீடித்த உழைப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதன் அனுபவமும் வித்தியமாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வர இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Good Battery Life, Good Sound Quality Nothing Ear Stick Launched in India at Perfect Price Range!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X