Home
Gadgets

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கம்மி விலையில் அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான கிஸ்மோர் நிறுவனம் தரமான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது கிஸ்மோர் நிறுவனம் இந்தியாவில் புதிய Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடலை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.95-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!

அம்சங்கள்: இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் 600 நிட்ஸ் பிரைட்னஸ், ஸ்ப்லிட் ஸ்கிரீன், 1 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக பிரீமியம் தோற்றம் கொண்ட மெட்டல் கேசிங், சதுரங்க வடிவம் கொண்ட டயல் போன்றவையுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று கூறலாம். பின்பு இந்த புதிய கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள 600 நிட்ஸ் பிரைட்னஸ் வசதியானது அதிகப்படியான சூரிய வெளிச்சங்களிலும் டிஸ்பிளேவை சிரமம் இன்றி பார்க்க உதவுகிறது. குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். அதேபோல் இந்த புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!

இந்த கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் ஆனது டிஜிட்டல் கிரவுன் வசதியை வழங்குகிறது. பின்பு ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜிபிஎஸ் டிராஜெக்டரி உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் ப்ளூடூத் காலிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

புதிய கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடல் அதிகபட்சம் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. பின்பு குயிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை குறிப்பிட்ட நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர பல அட்டகாசமான அம்சங்கள் இதில் உள்ளன.

அதாவது SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் டிராக்கர் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடல். பின்பு இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர் வசதிகளையும் வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். அதேபோல் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!

என்ன விலை? இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 1 வருட வாரண்டி வழங்குகிறது. அதேபோல் ரூ.1,999-விலையில் இந்த கிஸ்மோர் Vogue ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும். மேலும் பிளாக், ஆரஞ்சு மற்றும் வைட் நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் மறறும் கிஸ்மோர் தளங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gizmore Vogue with Split Screen Launched in India: Check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X