புரட்டிப்போடும் ஸ்மார்ட்வாட்ச்! ரூ.1,799 போதும்.. வயர்லெஸ் சார்ஜிங்.. மெட்டல் பாடி.. எந்த மாடல்?
இந்தியாவில் முதல் முறையாக வெறும் ரூ.1,799 விலையில் வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் காலிங், மெட்டல் பாடி, அமோலெட் டிஸ்பிளே என்று புரட்டிப்போடும் அம்சங்களுடன் கிஸ்மோர் (Gizmore) நிறுவனத்தின் கிஸ்மோர் பிரைம் ஸ்மார்ட்வாட்ச் (Gizmore Prime Smartwatch) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சின் மற்ற அம்சங்களும் பின்னிப்பெடல் எடுக்கிறது. புதிதாக மார்கெட்டுக்கு வந்துள்ளதால், அறிமுக விலையாக மலிவு விலையில் கிடைக்கிறது. அடுத்த சில நாட்களில் விலை அதிகரிக்கூடும். இந்த நேரத்தில் கிஸ்மோர் பிரைம் ஸ்மார்ட்வாட்ச்சில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இப்போது வரும் ஸ்மார்ட்வாட்ச்களில் புதுப்புது அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ப விலையும் கூடுதலாகவே இருக்கின்றன. இதனால், ஆஃபர் விலையில் கிடைக்கும் வரையில் காத்திருந்து ஸ்மார்ட்வாட்ச் வாங்க பலர் திட்டம் போட்டிருப்பார்கள். இவர்களுக்கு என அட்டகாசமான அம்சங்களுடன், மலிவு விலையில் கிஸ்மோர் பிரைம் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிஸ்மோர் பிரைம் அம்சங்கள் (Gizmore Prime Specifications) : இந்த வாட்ச் 1.45 இன்ச் (412×412 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் ஏஓடி (AOD)சப்போர்ட் உள்ளது. ஸ்பிளிட் ஸ்கிரீன் அம்சம் (Split Screen) இருக்கிறது. 3 கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மெட்டல் பாடி கொண்டுள்ளது. V5.0 ப்ளூடூத் இணைப்புத் திறன் கொண்டுள்ளது.
இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் வருகிறது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் மல்டிபிள் வாட்ச் பேஸ்கள் உள்ளன. 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (100+ Sports Mode) இருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் பேக்கப் கிடைக்கும். இந்த வாட்ச் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. IP67 வாட்டர் ரெஸிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitoring), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ப்ரீத் டிரெய்னிங் மானிட்டர் (Breathe Training), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor) மற்றும் மாதவிடாய் மானிட்டர் (Menstrual Monitor) வருகின்றன. பிரைவசி லாக், இன்பிலட் கேம்ஸ் மற்றும் கால்குலேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சில் இந்தி மொழி சப்போர்ட்டும் உள்ளது. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.1,799 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் பிளாக், பிரவுன் ஆகிய இரண்டு கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








