இவ்ளோ கம்மி விலையில் இப்படி ஒரு கேமிங் Smartwatch-ஆ.. நம்பி வாங்கலாம்.!
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான கிஸ்மோர் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

கிஸ்மோர் நிறுவனம்
தற்போது கிஸ்மோர் நிறுவனம் கிஸ்பிட் அல்ட்ரா (Gizfit Ultra) எனும் ஸ்மார்ட்வாட்ச்-ஐ தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்ச் போன்றே வடிவமைப்பைக் கொண்ட கிஸ்பிட் அல்ட்ரா வாட்ச் ஆனது சதுரங்க வடிவிலான டையல் கொண்டுள்ளது.

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
மேலும் கிஸ்பிட் அல்ட்ரா IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கிஸ்மோர் நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் முக்கியமான அம்சங்களை இப்போது பார்ப்போம்.

வளைந்த டிஸ்பிளே
கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.69 இன்ச் எச்டி வளைந்த டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்பிளேவை வழங்குகிறது. பின்பு 60 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோட்கள், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள் போன்ற பல சிறப்பான வசதிகளை கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

அலெக்சா மற்றும் சிரி
குறிப்பாக அலெக்சா மற்றும் சிரி போன்ற வாய்ஸ் கமாண்ட்கள் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர ப்ளூடூத் காலிங், பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்.

ஸ்லீப் சென்சார்
அதேபோல் இந்த ஸ்மார்ட் வாட்ச் SpO2, ஹார்ட் ரேட் மற்றும் ஸ்லீப் சென்சார்கள் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?
கிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ரூ.5,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் விலை ரூ.2,699 மட்டுமே என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் விளம்பர சலுகையாக வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ தற்போது ரூ.1,799-க்கு வாங்க முடியும் என்று கிஸ்மோர் நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறங்கள்
இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். பின்புகிஸ்பிட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் வைட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம்
அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனமும் கம்மி விலையில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் (BIS)வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவித அளவுகளில் கிடைக்கும்
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 42mm மற்றும் 46mm என்ற இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் 24x7 இதய துடிப்பு மானிட்டர், ஸ்லீப் மாணிட்டர், பீடோமீட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், SpO2 மாணிட்டர் போன்ற பல வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

வட்ட வடிவ டையல்
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வட்ட வடிவ டையல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இரண்டு நிறங்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. இதுதவிர பிரத்யேக இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்.
அதேபோல் 5ஜி சேவை ஆனது இந்தியாவில் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்பிளஸ் நிறுவனம்விரைவில பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications