அறிமுகம் ஆனதுமே ரூ.1000 ஆபர்! இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!

|

இந்தியாவில் கிஸ்மோர் நிறுவனம் புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்

கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்

முதலில் கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் இதில் ஸ்போர்ட் டிசைன் மற்றும் அலுமினியம் அலாய் பாடி வழங்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதன்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கிஸ்மோர் நிறுவனம்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

குறிப்பாக கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.37-இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்பிளே உள்ளது. எனவே இது ஒரு சிறந்த அனுபவம் கொடுக்கும். பின்பு 420x420 பிக்சல் ரெசல்யூஷன், லெதர் ஸ்டிராப்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. எனவே இதை பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். மேலும் இதய துடிப்பு மாணிட்டரிங், பயோமெட்ரிக் சென்சார்கள், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் டிராக்கிங், வாட்ச் பேஸ்கள் போன்ற அசத்தலான
அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

ஸ்போர்ட்ஸ் மோட்

ஸ்போர்ட்ஸ் மோட்

குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

ஸ்பிளிட்-ஸ்கிரீன்

ஸ்பிளிட்-ஸ்கிரீன்

550 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச். மேலும் இன்பில்ட் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக ஸ்பிளிட்-ஸ்கிரீன் அம்சத்தையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

 கூகுள் அசிஸ்டண்ட்

கூகுள் அசிஸ்டண்ட்

அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி ஆதரவுடன் வருகிறது இந்த கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக புளூடூத் அழைப்பையும் ஆதரிக்கிறது இந்தபுதிய ஸ்மார்ட்வாட்ச். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனை

Gizmore GIZFIT Glow ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.3,499-ஆக உள்ளது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில்( Big Billion Days) இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.2,499-விலையில் வாங்க முடியும்.

மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!

கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்

மேலும் கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிரவுன், பர்கண்டி போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த
ஸ்மார்ட்வாட்ச் உடன் பல ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Gizmore GIZFIT Glow Smartwatch Launched in India: Specs, Pirce, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X