Garmin Venu Sq மற்றும் Garmin Venu Sq Music எடிஷன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
கார்மின் நிறுவனம் இந்தியாவில் கார்மின் வேணு எஸ்கியூ மற்றும் கார்மின் வேணு எஸ்கியூ மியூசிக் எடிஷன் என இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்மின் வேணு சீரிஸ் ஸ்மார்ட் வாட்சின் விலை மற்றும் சிறப்பம்சத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய ஸ்மார்ட்வாட்ச்களை கார்மின் நிறுவனம் அதன் சில்லறை கடைகள் மற்றும் ஹீலியோஸ் கடைகள், ஜஸ்ட் இன் டைம், லைஃப்ஸ்டைல், கமல் வாட்ச் மற்றும் மலபார் வாட்ச் உள்ளிட்ட பிற சில்லறை கடைகளில் கிடைக்கும் படி செய்துள்ளது. ஆஃப்லைன் கடைகளைத் தவிர, அமேசான், பிளிப்கார்ட், மின்ட்ரா, பேடிஎம் மால், மற்றும் டாடா க்ளிக் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களில் விரைவில் வாங்க கிடைக்கும்.
இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் இதய துடிப்பு கண்காணிப்பு, ஹைடிரேஷன் கண்காணிப்பு, சுவாச கண்காணிப்பு மற்றும் பாடி பேட்டரி எனர்ஜி கண்காணிப்பு போன்ற அம்சங்கள் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச்கள் யோகா, பைலேட்ஸ், ரன்னிங், சைக்ளிங் பயிற்சி உள்ளிட்ட 20 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் வருகின்றது.
ஆர்க்கிட் / மெட்டல் ஆர்க்கிட், வெள்ளை / லைட் கோல்டு மற்றும் ஷாடோவ் க்ரெய் / ஸ்லேட் ஆகிய மூன்று வண்ண வகைகளில் கார்மின் வேணு எஸ்கியூ வாட்ச்கள் ரூ. 21,090க்கு கிடைக்கிறது. வேணு எஸ்கியூ மியூசிக் எடிஷன் மறுபுறம் லைட் சாந்தி / ரோஸ் கோல்டு, நேவி/ லைட் கோல்டு, மாஸ் / ஸ்லேட் மற்றும் ப்ளாக் / ஸ்லேட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வெறும் ரூ. 26,290 என்ற விலையில் வருகிறது.


Click it and Unblock the Notifications