Home
Gadgets

தூக்குங்கடா அந்த தங்கத்த.. SOLAR சார்ஜிங்.. 10ATM ரேட்டிங்.. GPS கனெக்டிவிட்டி.. 24/7 மானிட்டரிங் மாடல்!

இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித் தூக்கும்படி சோலார் சார்ஜிங் மட்டுமல்லாமல், 10ஏடிஎம் வாட்டர் ரேட்டிங், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, மோனோகுரோம் டிஸ்பிளே, ஹெல்த் டிராக்கிங் போன்ற பீச்சர்களுடன் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சீரிஸ் (Garmin Instinct 3 Series) மாடல்கள் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் ரக்கட் மாடல்களாக களமிறங்கி இருக்கும் இந்த கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சீரிஸின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மொத்தமாக மூன்று வெர்ஷன்களில் இந்த இன்ஸ்டிங்க்ட் சீரிஸ் கிடைக்கிறது. ஆகவே, கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 அமோலெட் (Garmin Instinct 3 - AMOLED), கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 ஈ (Garmin Instinct 3 - E) மற்றும் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சோலார் (Garmin Instinct 3 - SOLAR) ஆகிய வெர்ஷன்கள் கிடைக்கின்றன. இந்த வெர்ஷன்களில் 50 எம்எம், 45 எம்எம் மற்றும் 40 எம்எம் கேஸ் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த! SOLAR சார்ஜிங்.. 10ATM ரேட்டிங்.. GPS வருது!

கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 அமோலெட் வெர்ஷனில் பெயருக்கு ஏற்ப அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. மற்ற 2 வெர்ஷன்களிலும் மோனோகுரோம் (Monochrome) டிஸ்பிளே கிடைக்கின்றன. மூன்று வெர்ஷன்களிலும் ஆல்வேஸ்-ஆன் சப்போர்ட் கிடைக்கிறது. சிலிகான் ஸ்ட்ராப் மெட்டீரியல் மற்றும் ஃபைபர் ரெய்ன்போர்ஸ்டு பாலிமர் கேஸ் மெட்டீரியல் கிடைக்கிறது.

ரக்கட் மாடல்களாக இருப்பதால், 10ஏடிஎம் வாட்டர் ரேட்டிங் கிடைக்கிறது. சோலார் வெர்ஷனில் 28 நாட்கள் பேக்கப் கிடைக்கும். மல்டி பேண்ட் ஜிபிஎஸ் கிடைக்கிறது. எல்இடி ஃபிளாஷ், 128 எம்பி மெமரி கிடைக்கிறது. பிரீமியம் கிளாக் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆட்டோமேட்டிக் டே-லைட் சேவிங் டைம், ஜிபிஎஸ் டைம் சிங்க், சன்ரைஸ் மற்றும் சன்செட் டைம்ஸ் வருகின்றன.

ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில், ஹார்ட் ரேட் மானிட்டர், ஹார்ட் ரேட் அலெர்ட், எனர்ஜி மானிட்டர், ஸ்ட்ரெஸ் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்லீப் கோச், வுமன் ஹெல்த் டிராக்கர் கிடைக்கின்றன. ஜிபிஎஸ் மட்டுமல்லாமல், குளோனாஸ், பாரோமீட்டர், காம்பஸ், கைரோஸ்கோப், தெர்மோமீட்டர் போன்ற பல்வேறு சென்சார்கள் கிடைக்கின்றன.

மேலும், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மற்றும் சேப்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 ஈ மாடலில் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. சன்லைட் விஷிபில் டிஸ்பிளே கிடைக்கிறது. இதிலும் 10 ஏடிஎம் வாட்டர் ரேட்டிங் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் முந்தைய மாடலை போலவே இருக்கிறது. இன்ஸ்டிங்க்ட் 3 அமோலெட் வெர்ஷனும் அப்படித்தான்.

டிஸ்பிளே, பேட்டரி பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அமோலெட் வெர்ஷனில் 18 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். பேட்டரி சேவர் மோடில் 24 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. 4 ஜிபி மெமரி கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை பார்ப்போம்.

40 எம்எம் கேஸ் மற்றும் 45 எம்எம் கேஸ் கொண்ட கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 ஈ வெர்ஷனின் விலை ரூ.35,990ஆக இருக்கிறது. அதேபோல கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 அமோலெட் வெர்ஷனின் 45 எம்எம் கேஸின் விலை ரூ.52,990ஆகவும், 50 எம்எம் கேஸின் விலை ரூ.58,990ஆகவும் இருக்கிறது. கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சோலார் வெர்ஷனின் 45 எம்எம் கேஸ் விலை ரூ.46,990ஆக உள்ளது.

அதுவே 50 எம்எம் கேஸின் விலை ரூ.52,990ஆக இருக்கிறது. இந்த விலையில் கார்மின் இந்தியா ஸ்டோர் மற்றும் பிரீமியம் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். சோலார் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த மாடல்கள் சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Garmin Instinct 3 Series With Solar Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X