Home
Gadgets

இப்படிவொன்ன யாரும் பாத்திருக்க மாட்டீங்க! சோலார் பவரில் மாஸ் காட்டும் Garmin ஸ்மார்ட்வாட்ச்!

இந்தியாவில் கார்மின் (Garmin) ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் ஸ்மார்ட்வாட்ச் (Garmin Instinct 2X Solar smartwatch) அறிமுகமாகியிருக்கிறது. இந்த வாட்ச் மார்க்கெட்டில் வரும் மற்ற எந்த ஸ்மார்ட்வாட்ச்களிலும் இல்லாத ஒரு பிரத்யேகமான அம்சத்தை கொண்டு களமிறங்கியிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பெரும்பலான அம்சங்கள் ஸ்மார்ட்வாட்ச்களில் வந்துவிட்டன. சொல்லப்போனால், ஸ்மார்ட்போன்களில் இல்லாத சில அம்சங்கள் கூட ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கின்றன. ஒரு ஸ்மார்ட்வாட்ச் வாங்கினால் போதும், ஒருவர் தனது முழு உடலையும் தொடர்ந்து கண்காணித்து வர முடியும். இதிலிருக்கும் ஹெல்த் மானிட்டர்கள் அவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன.

இப்படிவொன்ன பாத்திருக்க மாட்டீங்க! சோலார் பவர் ஸ்மார்ட்வாட்ச் Garmin

இதன் காரணமாகவே மக்களும் அதிகம் வாங்கிப் பயன்படுத்துவதால், ஸ்மார்ட்வாட்ச் விற்பனை போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனங்கள் புதுப்புது அம்சங்கள் உடன் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வரிசையில், பிரபல கார்மின் (Garmin) ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிறுவனம், சோலார் பவரில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்வாட்ச்களை களமிறக்கியிருக்கிறது.

கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் மற்றும் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் டாக்டிகல் எடிஷன் (Garmin Instinct 2X Solar Tactical Edition) என்னும் இரண்டு வகை ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சோலார் பவர் மட்டுமல்லாமல், எல்இடி டார்ச், ஜிபிஎஸ் என்று பல்வேறு அம்சங்களை இந்த வாட்ச்கள் கொண்டிருக்கின்றன. இந்த 2 வாட்ச்களின் முழு அம்சங்கள் பின்வருமாறு.

கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் அம்சங்கள்: இந்த வாட்ச் 1.1 இன்ச் (176 x 176 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு சோலார் பவர் சார்ஜிங் (Solar Power Charging) வாட்ச் என்பதால் அன்லிமிடெட் பேட்டரி லைப் கொண்டுள்ளது. ஒருவேளை நீங்கள் சோலார் பவரை பயன்படுத்தவில்லை என்றால், 40 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த வாட்ச்சில் கொடுக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் (GPS Mode) மோடை பயன்படுத்தினால், தொடர்ந்து 60 மணி நேரம் பேக்கப் கிடைக்கும்.

ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி (GPS connectivity) உள்ளது. அதோடு வழக்கமான கால், மெசேஜ், இமெயில் நோட்டிஃபிகேஷன்களை பார்த்துக்கொள்ள முடியும். ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப்பிங் மானிட்டர், பல்ஸ் ரேட் மானிட்டர், மென்ஸ்சுரல் மானிட்டர் உள்ளிட்ட ஹெல்த் மானிட்டர்கள் உள்ளன. 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது.

குறிப்பாக எல்இடி பிளாஷ்லைட் (LED flashlight) கொடுக்கப்பட்டுள்ளது. கிராஃபைட் (Graphite), ஃபிளேம் ரெட் (Flame Red), வைட்ஸ்டோன் (Whitestone), மோஸ் (Moss) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ. 50,490 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலார் டாக்டிகல் எடிஷன் அம்சங்கள்: இந்த வாட்ச்சானது, கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 எக்ஸ் சோலாரில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அதோடு கூடுதலாக சில அம்சங்களை வைத்திருக்கிறது. இந்த வாட்ச் மொனோகுரோம் (monochrome), சன்லைட் விசிபில் (sunlight-visible) டிஸ்பிளே கொண்டுள்ளது.

சோலார் பவர் இல்லாமல் பயன்படுத்தினால் ஸ்மார்ட்வாட்ச் மோடில் 28 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஜிபிஎஸ் மோடில் 30 மணி நேரம் பேக்கப் கிடைக்கும். பேட்டரி ஷேவர் மோடில் 65 நாட்களுக்கு வாட்ச்சை பயன்படுத்தலாம். இதில் நைட் விஷன் (night vision) உள்ளது. பாலிஸ்டிக்ஸ் கால்குலேட்டர் (ballistics calculator) உள்ளது. இந்த வாட்ச் பிளாக் (Black) மற்றும் கொயோட் டேன் (Coyote Tan) கலர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த வாட்ச்சின் விலை ரூ.55,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Garmin Instinct 2X Solar Smartwatch With LED Flashlight Launched in India Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X