Home
Gadgets

ரூ. 1 லட்சத்தை விட குறைந்த விலை.. அப்படி இந்த வாட்சில் என்ன இருக்கிறது? உலகை திரும்பி பார்க்க வைத்த Garmin..

கர்மின் (Garmin) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கர்மின் பெனிக்ஸ் 8 (Garmin Fenix 8) என்ற பெயருடன் பிரீமியம் ரேஞ் மல்டி ஸ்போர்ட் ஜிபிஎஸ் (Multisport GPS Smartwatch) ஸ்மார்ட்வாட்ச் சாதனமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்சின் விலையை கேட்டால் உங்கள் தலையே கிறுகிறுத்துவிடும். இந்த புதிய ஸ்மார்ட்வாட்சின் விலை என்ன? இதில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

புதிய கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் (Garmin Fenix 8 Smartwatch) சாதனம் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அதிநவீனமான அம்சங்களை கொண்டுள்ளது. இது பிட்னஸ் மாட்யூல் உடன் அதிகரித்த பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இதன் பெர்பார்மென்ஸ் பிட்னஸ் பிரியர்களுக்கு மகத்தான சிறந்த சாய்ஸாக அமைகிறது. இது பல பெர்சனலிஸ்ட்டு ஆப் உடன் வருகிறது.

ரூ. 1 லட்சத்தை விட குறைந்த விலை.. அப்படி இந்த வாட்சில் என்ன இருக்கிறது

ரூ. 1 லட்சத்தை விட குறைந்த விலை.. அப்படி இந்த வாட்சில் என்ன இருக்கிறது?

புதிய கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் சாதனம் AMOLED மாடல் டிஸ்பிளேவுடன் வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 29 நாள் நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இது சாதாரண மாடலுக்கான சார்ஜ் நிலை ஆகும். இந்த Garmin Fenix 8 series இப்போது சோலார் அம்சத்துடனும் வருகிறது. இது 48 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

சோலார் மாடல் கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் அம்சமும் ஸ்டாண்டர்ட் மாடல் அம்சமும் ஒரே மாதிரியானவை தான். ஆனால் விலை மட்டும் வேறுபடுகிறது. இதில் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. VO2 மேக்ஸ் (VO2 Max), என்டுறன்ஸ் (endurance), ஹில் ஸ்கோர் (hill score) அம்சத்தை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்தை ஆதரிக்கிறது.

கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் (Garmin Fenix 8 Smartwatch Price):

இது இன்பில்ட் மைக் உடன் ஹேண்ட்ஸ் ப்ரீ கம்யூனிகேஷன் ஆதரவை கொண்டுள்ளது. இது வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ் ஆதரவது வாய்ஸ் கமாண்ட் அம்சம் என்று எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது. இது மிலிட்டரி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹீட், ஸ்ட்ரெஸ், வாட்டர் என்று எல்லா சூழ்நிலையையும் தாங்கும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜிபிஎஸ் அம்சத்தை கொண்டுள்ளது.

இது மேப்பிங் மற்றும் நேவிகேஷன் அம்சத்தை கொண்டுள்ளது. இது மேப்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இப்போது 43mm, 47mm, மற்றும் 51mm ஆகிய மூன்று அளவுகளில் வருகிறது. இவை மூன்றும் ஸ்டாண்டர்ட் மாடல்களின் அளவுகளாகும். இந்த புதிய கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் சோலார் வேரியண்ட் மாடல் 47mm மற்றும் 51mm அளவுகளில் வருகிறது.

கர்மின் பெனிக்ஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் (Garmin Fenix 8) சாதனம் ரூ. 86,990 விலையில் வருகிறது. இது இரண்டு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இப்போது Garmin இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Garmin Fenix 8 series 43mm, 47mm, and 51mm AMOLED Version and 47mm and 51mm Solar Variant price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X