அட்றா சக்கை.. அதே விலைக்கு 2 புதிய இயர்பட்ஸ் மாடல்கள்.. சம்பவக்காரன் Samsung!
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு (Samsung Galaxy Unpacked) நிகழ்வு நடக்க இன்னும் சில நாட்களே (பிப்.25) உள்ள நிலையில், சாம்சங் நிறுவனத்தின் அடுத்த இயர்பட்ஸ் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்டின் கூற்றுப்படி, கேலக்ஸி பட்ஸ் 4 (Galaxy Buds 4) மாடல் அமெரிக்காவில் $179.99 க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.16329 ஆகும். அதே நேரத்தில் கேலக்ஸி பிட்ஸ் ப்ரோ (Galaxy Buds 4 Pro) மாடலின் விலை $249.99 ஆக இருக்கலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.22680 ஆகும்.

இந்த விலை விவரங்கள் துல்லியமாக இருந்தால், இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி பட்ஸ் 3 சீரீஸ் (Galaxy Buds 3 Series) வெளியீட்டு விலையை போன்றது. இது உண்மையிலேயே கவனிக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். ஒருபக்கம் - காம்போனென்ட் செலவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. மறுபக்கம் - பல பிராண்டுகள் அமைதியாக ஆண்டுதோறும் விலைகளை உயர்த்துகிறது. ஆனால் சாம்சங் அதன் விலைகளை தக்கவைக்க விரும்புவது போல் தெரிகிறது.
கேலக்ஸி பட்ஸ் 4 சீரீஸ் டிசைன் லீக்: டிப்ஸ்டர் முகமது காத்ரி (@Mohammed_K_2010) எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள புகைப்படங்களின்படி சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 4 ஆனது கீழ்நோக்கி நீட்டிக்கப்பட்ட குறுகிய ஸ்டெம்களுடன் க்ளீன் ஆன இன்-இயர் வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்டாண்டர்ட் மாடல் ஆனது இயர்பட்ஸ் மற்றும் சார்ஜிங் கேஸ் ஆகிய இரண்டிலும் பளபளப்பான பினிஷையும் பெற்றுள்ளது.
மேலும் லீக் ஆன ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வட்டமான விளிம்புகள் மற்றும் ஃபிளிப்-டாப் மூடியுடன் கூடிய சிறிய, சதுர வடிவ சார்ஜிங் கேஸையும் காட்டுகின்றன. இயர்பட்ஸ் ஆனது கேஸின் உள்ளே செங்குத்தாக அமர்ந்துள்ளன. மறுகையில் உள்ள கேலக்ஸி பட்ஸ் 4 ப்ரோ மாடல் ஆனது அதிக பிரீமியம் லுக்கை வழங்குகிறது. மேட் அல்லது டூயல்-டோன் பினிஷை கொண்டிருப்பது போல் தெரிகிறது. குறிப்பாக ஸ்டெம்களில், மாறுபட்ட அசென்ட்களை கொண்டிருக்கலாம்.
இருப்பினும் ப்ரோ மாடலின் சார்ஜிங் கேஸ் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலை போலவே உள்ளது, ஆனால் அமைப்பு மற்றும் விவரங்களில் சிறிய சுத்திகரிப்புகளை உள்ளடக்கியிருக்கலாம். ப்ரோ மாடல் ஆனது கூடுதல் கட்அவுட்கள் அல்லது சென்சார் இடங்களை கொண்டிருப்பதாக தெரிகிறது, இது சில மேம்பட்ட திறன்களை வழங்கலாம்.
பிப்.25 அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மாடல் ஆனது 6.3-இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அளவீட்டில் இது 149.6 x 71.7 x 7.2 மிமீ அளவிடும் மற்றும் 137 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சாம்சங் மீண்டும் அதன் டூயல்-சிப் உத்தியைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி எஸ்26 மாடல் ஆனது எக்ஸினோஸ் 2600 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம், அதே நேரத்தில் மற்ற பிராந்தியங்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை பெறலாம். இது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 உடன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை 4,300mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல் ஆனது 6.7-இன்ச் HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். அளவீட்டில் இது 158.4 x 75.8 x 7.3 மிமீ அளவிடும் மற்றும் 190 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இதுவும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டிலும் ஒற்றுமை இருக்கும். எஸ்26 மாடலை போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி எஸ்26 ப்ளஸ் மாடல் ஆனது எக்ஸினோஸ் 2600 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம், அதே நேரத்தில் மற்ற பிராந்தியங்களில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை பெறலாம். இது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 உடன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சற்றே பெரிய 4,900mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications