Home
Gadgets

ஷார்ப்பா வெளிவந்த G-SHOCK கட்டானா பிளேடு வாட்ச்.. உலகளவில் மொத்தமே 800 வாட்ச் தான் இருக்கு.. விலை என்ன?

நூற்றாண்டுக் கால பழமையான பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து, ஜி-ஷாக் நிறுவனம் வரும் நவம்பர் 2024 இல் ஜி-ஷாக் லிமிடெட் எடிஷன் கட்டானா MR-G வாட்ச் (G-SHOCK's Limited-Edition Katana-Inspired MR-G) மாடல் கடிகாரத்தை வெளியிட உள்ளது. ஜி-ஷாப் நிறுவனத்தின் அறிவிப்பு படி, உலகளவில் வெறும் 800 பீஸ் வாட்ச் மட்டுமே இந்த மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இதன் விலை என்ன? இதை எப்போது G-SHOCK ரசிகர்கள் வாங்கலாம் என்பது போன்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

G-SHOCK நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள MRG-B2000JS-1A மாடல், சேகரிப்பாளர்களின் கனவை நிறைவேற்றும் ஒரு விருப்பமாக வெளிவந்துள்ளது. இது கட்டானா பிளேடு என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற ஜப்பானிய வாள் தயாரிப்பு கலையை, வாட்ச் தொழில்நுட்பத்துடன் இணைத்து ஒரு புதுமையான படைப்பை உருவாக்கியுள்ளது. அது தான் இந்த புதிய ஜி-ஷாக் லிமிடெட் எடிஷன் கட்டானா MR-G வாட்ச் (G-SHOCK's Limited-Edition Katana-Inspired MR-G Watch).

ஷார்ப்பா வெளிவந்த G-SHOCK கட்டானா பிளேடு வாட்ச்.. மொத்தமே 800 வாட்ச்..

ஜி-ஷாக் லிமிடெட் எடிஷன் கட்டானா MR-G வாட்ச் (G-SHOCK's Limited-Edition Katana-Inspired MR-G Watch):

இந்த கடிகாரத்தின் வடிவமைப்பு ஜூரியோகு-மரு: சான்-க்கு ஒரு மரியாதை செய்யும் படைப்பாக, பிரபலமான கட்டானா வாள் தயாரிப்பாளர், கமி யாமா தெருஹிராவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜி-ஷாக்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்ட ஒரு கட்டானா வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. மறு படிகமாக்கப்பட்ட டைட்டானியத்தில் இருந்து செய்யப்பட்ட ஒரு பெசலை இந்த ஜிஷாக் கட்டானா வாட்ச் (G-SHOCK Katana Watch) கொண்டுள்ளது.

இது பாரம்பரிய கையால் தயாரிக்கப்பட்ட கட்டானா பிளேடுகளில் காணப்படும் தனித்துவமான வடிவத்தை எதிரொலிக்கிறது. கட்டானாவின் பிளேடைப் போன்ற ஒரு பளபளப்பான தோற்றத்தைத் தருவதற்காக, கேஸ் நீல-சாம்பல் AIP கோட்டிங் மூலம் மெருகேற்றப்பட்டுள்ளது. இது ஒரு நுணுக்கமான கைவினைத்திறன் மற்றும் கலைப்பொருள் புதுமையை உணர்த்தும் தயாரிப்பாக வெளிவருகிறது. பாரம்பரியமான தன்மையைத் தருவதற்காக, கடிகாரத்தின் பேண்ட் இல் அஓகை-நுரி (aogai-nuri) பயன்படுத்தப்படுகிறது.

இது கட்டானா scabbards-களில் காணப்படும் அலங்கார வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்ட, மெல்லிய பவளங்கள் இணைக்கப்பட்ட ஒரு சிக்கலான லோகுர் (lacquer) வேலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான டீடைலிங் வெளிச்சத்துடன் மாறுபடும் கவர்ச்சியான பிரகாசத்தை உருவாக்குகிறது. இது கடிகாரத்தின் தோற்றத்தை கவர்ச்சிகரமானதாக மேம்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு துண்டும் தனித்துவமாக Kamiyama Teruhira -வால் கையால் செதுக்கப்பட்ட குறியீடுகளை வாட்ச் இன் பின்பக்கத்தில் கொண்டுள்ளது.

ஜப்பானிய கூர்மையான காட்டனா வாள் இன் பாரம்பரிய வடிவமைப்பு இந்த வாட்சில் காணப்பட்டாலும், MR-G கடிகாரம் நவீன செயல்பாடுகளை ஜிஷாக் நிறுவனம் வழங்க மறுக்கவில்லை. இந்த தனித்துவமான வாட்ச் ப்ளூடூத் (Bluetooth) இணைப்பைக் கொண்டுள்ளது. இது சூரிய சக்தியை நம்பியுள்ளது மற்றும் ரேடியோ கண்ட்ரோல் (radio-controlled) நேரக் கணக்கீட்டைக் கொண்டு இயங்குகிறது. துல்லியத்தையும் செயல்திறனையும் இது உறுதி செய்கிறது.

இந்த G-SHOCK Katana Watch பேஸ்-ஐ ஸ்க்ராட்ச்க்கு எதிராக, ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை வழங்க நிறுவனம் ஸபைர் கிரிஸ்டல் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் இதன் கேஸ் மற்றும் பேண்ட் ஆகிய இரண்டையும் மிகவும் உறுதியான டைட்டானியத்தில் நிறுவனம் உருவாக்கியுள்ளது. MR-G கடிகாரத்தின் டயல் (dial) ஹிஷிமாக்கி காரா (hishimaki-gara) வடிவத்தை காண்பிக்கிறது. இது பெரும்பாலும் வாள் இன் கூர்மையான பகுதியில் காணப்படும் வைர வடிவங்களை பிரதிபலிக்கிறது.

ஜிஷாக் கட்டானா வாட்ச் விலை (G-SHOCK Katana Watch Price):

இந்த தனித்துவமான கடிகாரம் சுமார் $8,000 அமெரிக்க டாலர்கள் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 6,72,626 ஆகும். இது அதன் பிரத்தியேகத்தையும் அதில் உறவாடும் பணக்கார வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. உலகளவில் வெறும் 800 வாட்ச் மட்டுமே இந்த எடிஷனில் உருவாக்கப்பட்டுள்ளதால் இப்போதே இதற்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
G-SHOCK Limited-Edition Katana-Inspired MR-G Watch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X