Home
Gadgets

Fujifilm X-T200 மிரர்லெஸ் கேமரா ஃபிலிப் டிஸ்பிளேயுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Fujifilm 2018 இன் எக்ஸ்-டி 100 மிரர்லெஸ் கேமராவைப் பின்தொடரும் எக்ஸ்-டி 200 (X-T200) மாடலை அறிமுகம் செய்துள்ளது. பில்ட்-இன் எலக்ட்ரானிக் வ்யூஃபைண்டருடன், எடை குறைக்கப்பட்டு ஃபிலிப் டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் புஜிஃபில்மின் இந்த எக்ஸ்-டி 200 தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Fujifilm X-T200 கேமரா

Fujifilm X-T200 கேமரா

Fujifilm X-T200 கேமரா, 24 மெகாபிக்சல் கொண்ட ஏபிஎஸ்-சி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, அதேபோல் இப்போது சிறந்த ஆட்டோஃபோகஸ் செயல்திறனுக்கான முழு ஃபேஸ்-டிடெக்ஷன் கவரேஜ் செயல் திறன் வழங்கப்பட்டுள்ளது. கேமராவின் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆற்றலுக்கு உதவுவதற்காக புஜிஃபில்ம் கேமராவில் கைரோ சென்சார்களைச் சேர்க்கப்பட்டுள்ளது.

4K வீடியோ

4K வீடியோ

அதேபோல் இந்த புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 கேமராவில், எச்டிஆர் மற்றும் 1080p வீடியோவுக்கான ஆதரவுடன் வினாடிக்கு 120 பிரேம்களில் ரெகார்டிங் சேவையை வழங்குகிறது. இதற்கிடையில், 4K வீடியோ அடிப்படையில் பயன்படுத்த முடியாத 15 பிரேம்ஸ்களில் இருந்து 30 பிரேம்ஸ்களாக இந்த புதிய புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 கேமராவில் உயர்த்தப்பட்டுள்ளது.

 புதிய புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 விலை என்ன?

புதிய புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 விலை என்ன?

இந்த புதிய புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 கேமரா இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.49861.29 என்ற விற்பனை விலையில் பாடியுடன் மட்டும் கிடைக்கிறது. அதேபோல் புஜிஃபில்ம் எக்ஸ்-டி 200 கேமரா15-45 மிமீ எஃப் / 3.5-5.6 பவர் ஜூம் லென்ஸுடன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.56984.84 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-மவுண்ட் XC 35mm f/2 லென்ஸ்

எக்ஸ்-மவுண்ட் XC 35mm f/2 லென்ஸ்

புஜிஃபில்ம் அதன் மலிவான எக்ஸ்-மவுண்ட் பிரைம் லென்ஸையும் இந்த கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த எக்ஸ்-மவுண்ட் பிரைம் லென்ஸ் எக்ஸ்-டி 200 கேமராவுடன் கச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிய எக்ஸ்-மவுண்ட் பிரைம் லென்ஸ் மாடலான XC 35mm f/2 இந்திய மதிப்பின்படி ரூ.14175 என்ற விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Fujifilm X-T200 Announces With 4K Video, Digital Gimbal Stabilization And XC 35mm f/2 Lens : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X