பியூஜிபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஷேர் SP-2 ஸ்மார்ட்போன் பிரிண்டர் - எப்படி இருக்கு?

|

வைஃபை இணைப்பு மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள படங்களை பகிர்ந்து உடனடியாக பிரிண்ட் எடுக்க உதவும் இந்த போர்டபிள் பிரிண்டர், 13,499 ரூபாய் மட்டுமே ஆகிறது.

பியூஜிபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஷேர் SP-2 ஸ்மார்ட்போன் பிரிண்டர்.!

ஸ்மார்ட்போன்களில் மூழ்கி உள்ள நாம் முன் காலத்தைச் சேர்ந்த பிரிண்ட் போடும் போட்டோக்களைக் குறித்து மறந்துவிட்டோம். டிஜிட்டல் நிலைக்கு மாறிவிட்ட பிறகு, திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளை மட்டுமே பிரிண்ட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் நினைவுகளைச் சேமிக்க, பிரிண்ட் போடப்பட்ட படங்கள் மட்டுமே உதவின என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த வகையில் தற்போதைய சந்தையில் உள்ள ஒரு தயாரிப்பாக பியூஜிபிலிம் இன்ஸ்டேக்ஸ் ஷேர் SP-2 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரிண்டர் மூலம் 10 வினாடிகளில் உடனடி பிரிண்ட் போட்டோக்களைப் பெற முடியும்.

பியூஜிபிலிம் இன்டேக்ஸ் ஷேர் SP-2?

பியூஜிபிலிம் இன்டேக்ஸ் ஷேர் SP-2?

ஏற்கனவே குறிப்பிட்டது போல, இன்டேக்ஸ் ஷேர் SP-2 என்பது ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு படத்தை வயர் இல்லாமல் பிரிண்ட் எடுக்க உதவும் ஒரு பாக்கெட் அளவிலான பிரிண்டர் ஆகும். 10 வினாடிகளில், கிரெடிட் கார்டு அளவிலான உடனடி போட்டோக்களை நல்ல தரத்துடன் பிரிண்ட் எடுக்க முடியும். 13,499 ரூபாய் நிர்ணயத்தில், இந்தியாவில் உள்ள பியூஜிபிலிமின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வியாபாரிகளிடம் கிடைக்கிறது.

உடனடி படங்களை எடுப்பது எப்படி?

உடனடி படங்களை எடுப்பது எப்படி?

இன்டேக்ஸ் ஷேர் SP-2 இயக்கும் வகையில் அமைப்பது மிகவும் எளியது. போர்டபிள் பிரிண்டர் உடன் ஸ்மார்ட்போனை வயர் இல்லாத முறையில் இணைக்க பயன்படும் இன்டேக்ஸ் ஷேர் என்ற ஒருங்கிணைப்பு அப்ளிகேஷனை, கூகுள் ப்ளே ஸ்டோரில் (ஐஓஎஸ்-க்கான அப்ளிகேஷன் ஸ்டோர்) இருந்து நிறுவி கொள்ள வேண்டும். இந்த போர்டபிள் பிரிண்டரில் 54 x 86மிமீ அளவிலான மினி வகை பிரிண்ட்களைக் கொண்டுள்ளது. முழு பிலிம் ஸ்ட்ரீப் ஓடி முடியும் வரை, பிலிம்கள் உள்ள மூடியை நீங்கள் திறக்க கூடாது.

இதில் ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரியை, எந்தொரு மைக்ரோ USB சார்ஜிங் கேபிள் மூலமும் சார்ஜ் செய்யலாம். முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், பிரிண்டர் மூலம் 100 படங்கள் வரை எடுக்கலாம். அதாவது இன்டேக்ஸ் மினி பிலிம்மின் 10 பேக்குகள் வரை பயன்படுத்தலாம்.

படத்தின் அளவு மற்றும் தரம்

படத்தின் அளவு மற்றும் தரம்

இன்டேக்ஸ் ஷேர் SP-2 மூலம் 800 x 600 புள்ளிகள் உடன் 318 dpi தரத்தைப் பெறலாம். உங்கள் போன் திரையில் உள்ள படத்தில் அதிர்வுகளை காண முடியாது. ஆனால் சிறந்த கான்ஸ்ட்ராக்ட் நிலைகளையும் அம்பிள் விவரங்களையும் கொண்டுள்ளது. இதற்காக போர்டபிள் பிரிண்டரில் ஒரு புதிய லேசர் அளிப்பு அமைப்பை, பியூஜிபிலிம் நிறுவனம் அளித்துள்ளது. இதன்மூலம் படத்தின் தரம் மற்றும் முழு பிரிண்டர் செயல்பாடு சிறப்பாக அமைய பொறுப்பு ஏற்கிறது. போர்டபிள் பிரிண்டர் எடுத்து கொள்ளும் 10 வினாடிகள் காத்திருந்தால், சிறந்த படத்தைப் பெற முடியும்.

உங்கள் பிலிம்களில் வடிகட்டிகளை இணைக்க வேண்டும்

உங்கள் பிலிம்களில் வடிகட்டிகளை இணைக்க வேண்டும்

இதில் பிரிண்டிங் சிறப்பாக வரும் வகையில், சில கவர்ச்சிகரமான வடிகட்டிகளையும் டெம்பிளேட்களையும், பியூஜிபிலிம் அளித்துள்ளது. பிரிண்ட் கட்டளை அளிக்கும் முன், படத்தின் ஒளிர்வு, கன்ஸ்ட்ராஸ்ட் மற்றும் படத்தின் முழுமை தன்மை ஆகியவற்றை சரிபார்க்க இந்த வடிகட்டிகள் உதவுகின்றன. கோலேஜ் டெம்பிளேட் மூலம் படங்களை இணைக்கவும் முடிகிறது. அதேபோல ஸ்லிட் டெம்பிளேட் மூலம் ஒரு படத்தை தனியாக பிரிக்கவும் முடியும். இன்டேக்ஸ் கம்பேயின் அப்ளிகேஷன் மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்கில் பகிரலாம்.

பியூஜிபிலிம் இன்டேக்ஸ் ஷேர் SP-2 போட்டியாளர்கள்

பியூஜிபிலிம் இன்டேக்ஸ் ஷேர் SP-2 போட்டியாளர்கள்

சமீபத்தில் வெளியான HP ஸ்ப்ராக்கெட் பிளஸ் போர்டபிள் பிரிண்டரின் போட்டியாளராக இது களமிறங்குகிறது. ரூ.8,999 விலையில் கிடைக்கும் இன்டேக்ஸ் ஷேர் SP-2, HP ஸ்ப்ராக்கெட் ஒப்பிடும் போது, உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் போட்டோ பிரிண்டராக உள்ளது. HP நிறுவனத்தின் போர்டபிள் பிரிண்டரில் HP ஸின்ங் பேப்பர் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கப்படுகிறது. இன்டேக்ஸ் ஷேர் SP-2 உடன் ஒப்பிட்டால், இதன் அளவு பெரியது ஆகும். அதே நேரத்தில், இன்டேக்ஸ் பிலிம்ஸில் கிடைக்கும் படங்களில், எதார்த்தத்தை விட சிறப்பாக காட்சி அளிக்கின்றன. பிலிம் ஸ்ட்ரிப்களை பொறுத்த வரை, 20 பேப்பர்கள் கொண்ட ஒரு பேக், ரூ.799 க்கு கிடைக்கிறது. ஆனால் 20 பிலிம் ஸ்ட்ரிப்களைக் கொண்ட இன்டேக்ஸ் பிலிம்கள் ரூ.1,017 விலைக்கு கிடைக்கிறது.

முடிவு

முடிவு

ஸ்மார்ட்போன்களின் மூலம் உடனடியாக போட்டோவை எடுத்து பிரிண்ட் எடுக்க விரும்பும் நபருக்கு, இது ஒரு சிறந்த தயாரிப்பாகும். அதிக தூரப் பயணங்களை உடனடியாக பதிவு செய்ய, இந்த சாதனம் ஒரு சிறப்பான ஒன்றாகும். உடனடி போட்டோகிராஃபி பொருட்களை பொறுத்த வரை, இது சந்தையின் சிறந்த தயாரிப்பாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Fujifilm Instax Share SP-2 Smartphone Printer Review : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X