தோழிக்கு நேர்ந்த பதற்றமான சம்பவம்; வெறும் ரூ.499/-க்கு பைக் சார்ஜர் உருவாக்கிய அருண்.!

மகளின் மொபைல் "ஸ்விட்ச் ஆப்" செய்யப்பட்டுள்ளதை அறிந்து, பயந்து போன பெற்றோர்கள் கிட்டத்தட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே புறப்பட்டு விட்டனராம்.

|

"நீயின்றி நானில்லை" என்பது எதற்கு பொருந்துமோ இல்லையோ - ஸ்மார்ட்போனுக்கும் நமக்கும் உள்ள பந்தத்துடன் நிச்சயம் பொருந்தும். அந்த பந்தம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்க இரண்டு விடயங்கள் தேவை - ஒன்று இன்டர்நெட் மற்றொன்று பேட்டரி.!

 வெறும் ரூ.499/-க்கு பைக் சார்ஜர் உருவாக்கிய அருண்.!

"லோ பேட்டரி" என்கிற ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷனை விட கவலைக்குரிய ஒரு விடயம் இல்லவே இல்லை எனலாம். அதுவும் முக்கியமான நேரங்களில், நீள்நெடிய பயணங்களின் போது ஏற்படும் "லோ பேட்டரி" ஆனது நமது உற்சாகத்தை காலி செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை. இதையெல்லாம் மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்றதே - பவர் எய்ட்.!

அமம் அருண்

அமம் அருண்

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அமம் அருண் உருவாக்கியுள்ள இந்த பைக் சார்ஜரான 'பவர் எய்ட்' சாதனத்திற்கு பின்னால் ஒரு குட்டி கதையே இருக்கிறது.

"ஸ்விட்ச் ஆப்"

அவரது கல்லூரி தோழி ஒருவர் கல்லூரியில் இருந்து வீடு திரும்ப தாமதமாகிவிட, அதைப் பற்றி பெற்றோருக்கு அவரால் தகவல் தெரிவிக்க முடியவில்லை, காரணம் மொபைலில் சுத்தமாக பேட்டரி இல்லை. மகளின் மொபைல் "ஸ்விட்ச் ஆப்" செய்யப்பட்டுள்ளதை அறிந்து, பயந்து போன பெற்றோர்கள் கிட்டத்தட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே புறப்பட்டு விட்டனராம், சரியான நேரத்தில் வீடு திரும்பியுள்ளார் அருணின் கல்லூரித்தோழி.!

சம்பவம்

சம்பவம்

பெற்றோர்கள், அவர்களின் பிள்ளைகள் எப்படி, எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாத நிலையில் பெரும் துயரத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கிற சம்பவம் அருணை பாதித்துள்ளது. இந்த இடத்தில் தான், அமம் அருண், இரு சக்கர வாகனத்தைச் பயணிக்கும் அதேவேளையில் மொபைல்போன் சார்ஜ் ஆகும்படியான ஒரு சாதனத்தை உருவாக்கத் தொடங்குகிறார்.

அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாதனம்

அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாதனம்

சுமார் எட்டு மாத சோதனைகளுக்குப் பின்னர், அமம் அருண் இறுதியில் பவர் எய்ட் எனும் இரு சக்கர வாகனங்களில் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாதனத்தை உருவாக்குகிறார்.

அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும்

அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும்

இந்த கையடக்க அளவிலான பைக் மொபைல் சார்ஜர் ஆனது மோட்டார் சைக்கிள்களில் இருந்து கியர்லெஸ் ஸ்கூட்டர்கள் மற்றும் மொபெட்ஸ் வரை, இந்திய சாலையில் பிரபலமாகக் காணப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் இணக்கமாக உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ்

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ்

இந்த சாதனம் மொபைலை சார்ஜ் செய்வதற்கு, இரு சக்கர வாகனத்தின் இக்னீஷனின் ரிசர்வ் இருப்பு திறனை (reserve potential energy) பயன்படுத்திக்கொள்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி இருப்பை உறுதி செய்யும் இந்த நீடித்த மற்றும் செலவு குறைந்த தயாரிப்பில் மொத்தம் இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் உள்ளன. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.

வாட்டர் ப்ரூப்

வாட்டர் ப்ரூப்

இக்கருவி சார்ந்த அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் : இது மழையினால் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கம் பெற்ற ஒரு வாட்டர் ப்ரூப் சாதனமாகும். உடன் தூசி சேராத 'டஸ்ட் ப்ரூப்' ஆதரவும் கொண்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதான முறையில் போல்ட் கொண்டு இணைக்கலாம் கழட்டலாம், என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது ரூ.499/-க்கு

தற்போது ரூ.499/-க்கு

இந்த பவர் எய்ட் பைக் மொபைல் சார்ஜர் ஆனது ரூ.355/-க்கு அறிமுகமாகி தற்போது ரூ.499/-க்கு இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இக்கருவி விரைவில், நாடு முழுவதும் உள்ள பெரிய சில்லறை கடைகளில் அறிமுகப்படுத்தப்படவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Fuel up your mobile battery on-the-go with this bike charger. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X