1 இல்ல.. மொத்தம் 5 ஆப்ஷன் இருக்கு... ரூ.15,000 பட்ஜெட்டில்.. விற்பனையில் அசத்தும் டாப் 5 Smart TVகள்!
இந்தியாவில் தற்போது அதிநவீன 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு(smart tv) நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சீன நிறுவனங்களின் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது.
அதேபோல் குவாட்-கோர் பிராசஸர், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, குரோம்காஸ்ட் வசதி, டால்பி ஆடியோ உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் டிவிகளை இப்போது பார்ப்போம்.

முதல் இடம்-32-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவி: இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரு.13,499-க்கு கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பெசல்-லெஸ் ஃபிரேம் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி.
அதேபோல் 32-இன்ச் ஒன்பிளஸ் (oneplus) Y1S ஸ்மார்ட் டிவியில் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஸ்மார்ட் ரிமோட், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
இரண்டாவது இடம்- 32-இன்ச் ரெட்மி (redmi)ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஸ்மார்ட் டிவி: இந்த டிவியை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் தற்போது வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த 32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் Vivid பிக்சர் என்ஜின் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்கள் உள்ளன.
மூன்றாவது இடம்: சாம்சங் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் Tizen டிவி: பிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவியை ரூ.13,990-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். பெசல்-லெஸ் டிசைன், அல்ட்ரா கிளீன் வியு, டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு, பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள், ஸ்கிரீன் ஷேரிங் வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

நான்காவது இடம்: 32-இன்ச் இன்பினிக்ஸ் X3IN ஸ்மார்ட் டிவி: சமீபத்தில் அறிமுகமான இந்த புதிய டிவியை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, டால்பி ஆடியோ வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
ஐந்தாவது இடம்: டிசிஎல் (TCL) பெசல்-லெஸ் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி: அமேசான் தளத்தில் இந்த டிவியை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக டால்பி ஆடியோவுடன் கூடிய 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு பெசல்-லெஸ் டிசைன், எச்டிஆர் 10 ஆதரவு, குவாட்-கோர் பிராசஸர், 1.5ஜிபி ரேம், 16ஜிபி ரோம், ஏஐ பிக்சர் என்ஜின், ஸ்மார்ட் ரிமோட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டிவி.


Click it and Unblock the Notifications








