Home
Gadgets

அசத்துறான்யா.. 43-இன்ச் முதல் 65-இன்ச் வரை.. 5 வெவ்வேறு டிவிகள் மீது Amazon-ன் அடேங்கப்பா ஆபர்!

உங்கள் வீட்டில் உள்ள பழைய டிவியை ஓரங்கட்டிவிட்டு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்கிற யோசனை மற்றும் அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருந்தால், அதை செய்வதற்கு இதுவே சரியான நேரம். ஏனென்றால் அமேசானில் கிடைக்கும் டிவி ஆபர்கள் அப்படி!

உடனே சுமாரான பிராண்டுகளின், மொக்கையான டிவிகள் மீது ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அமேசானின் இந்த ஆபர் - சாம்சங் (Samsung), சோனி (Sony), ஒன்பிளஸ் (OnePlus) போன்ற பெரிய பிராண்டுகளிலிருந்து கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் மீது அறிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் Amazon.. 5 வெவ்வேறு ஸ்மார்ட் டிவிகள் மீது அடேங்கப்பா ஆபர்!

01. சாம்சங் கிரிஸ்டல் 4கே நியோ டிவி (Samsung Crystal 4K Neo TV)

43-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் வரும் இந்த சாம்சங் டிவி தற்போது அமேசான் வழியாக ரூ.31,490 க்கு வாங்க கிடைக்கிறது. இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட், யுனிவர்சல் கைட், சாம்சங் டிவி பிளஸ் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வரும் இந்த டிவி ஆட்டோ கேம் மோட், மோஷன் எக்ஸ்செலரேட்டர் போன்ற கேமிங் அம்சங்களையும் பேக் செய்கிறது.

02. ஹைசென்ஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி (Hisense 4K Ultra HD TV)

120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 55-இன்ச் 4கே எச்டி டிஸ்பிளேவுடன் வரும் இந்த ஹைசென்ஸ் டிவி, தற்போது அமேசான் வழியாக ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் 5.1 மட்டுமின்றி 4 எச்டிஎம்ஐ, 1 யுஎஸ்பி 3.0, 1 யுஎஸ்பி 2.0 என பல வகையான கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்குகிறது.

03. சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி டிவி (Sony Bravia KD-65X74K 4K Ultra HD TV)

60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவுடன் வரும் இந்த சோனி ஸ்மார்ட் டிவி, தற்போது அமேசான் வழியாக ரூ. 42,990 க்கு வாங்க கிடைக்கிறது. 178 டிகிரி வைட்-ஆங்கிள் வியூவை வழங்கும் இந்த டிவியில் கூகுள் டிவி, வாட்ச்லிஸ்ட், வாய்ஸ் சேர்ச், கூகுள் பிளே, குரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளன.

04. ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்55 (Redmi Smart TV X55)

60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவுடன் வரும் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி, தற்போது அமேசான் வழியாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு டிவி 10, கிட்ஸ் மோட் உடனான பேரன்ட்டல் லாக், யுனிவர்சல் சேர்ச், ஓகே கூகுள் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற அம்சங்களும் உள்ளன.

05. ஏசர் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (Acer 4K Ultra HD Android Smart LED TV)

55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேயுடன் வரும் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி, தற்போது அமேசான் வழியாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்குள் வந்தாலும் கூட, இது எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் ஃப்ரேம்லெஸ் டிசைனை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி வைட் கலர் கேமட்+, எச்டிஆர்10, சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மென்டேஷன் மற்றும் 4கே அப்ஸ்கேலிங் மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் இன்பில்ட் ஸ்மார்ட் ப்ளூ லைட் ரிடெக்ஷன் தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவுடன் 30W ஸ்பீக்கரும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
From 43 inch to 65 inch These 5 different smart TVs gets amazing offers on Amazon Check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X