Home
Gadgets

நான்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Motorola.! என்னென்ன அம்சங்கள்?

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நான்கு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது மோட்டோரோலா என்விஷன் (Motorola Envision) 32-இன்ச் (எச்டி), 43-இன்ச் (ஃபுல் எச்டி), 43-இன்ச் (4கே), 55-இன்ச் (4கே) ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நான்கு ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Motorola.!

மோட்டோரோலா Envision 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 270 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளன. அதேபோல் இதன் 43-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 270 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மோட்டோரோலா Envision 43-இன்ச் மற்றும் 55-இன்ச் 4கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகள் 3840 × 2160 பிக்சல்ஸ் மற்றும் 330 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த 43-இன்ச், 55-இன்ச் 4கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக இந்த நான்கு புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் உடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இந்த மோட்டோரோலா Envision சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள்.

மோட்டோரோலா Envision 32-இன்ச் (எச்டி) மற்றும் 43 (ஃபுல் எச்டி) ஸ்மார்ட் டிவிகள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. அதன்பின்பு மோட்டோரோலா Envision 43-இன்ச் மற்றும் 55-இன்ச் 4கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மோட்டோரோலா Envision சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவிகள். இப்போது இந்த டிவிகளின் விலையைப் பார்ப்போம்.

மோட்டோரோலா Envision 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் மோட்டோரோலா Envision 43-இன்ச் 4கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் 4கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Four new Motorola Smart TVs have been launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X