குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!
கூகுள் இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி கூட உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 செயலியுடன் அட்டகசமான ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது ஃபாசில் என்ற நிறுவனம். மேலும் இந்த சாதத்தின் வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஃபாசில் நிறுவனம் செய்துள்ளது ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் கூகுள் நிறுவனத்தின் வியர் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

பாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச்
பாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் பொறுத்தவரை நீட்டிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், புதிய பேட்டரி சேவிங் மோட், மேம்படுத்தப்பட்ட ஆம்பியன் மோட், இன்டகிரேட் செய்யப்பட்ட இதயதுடிப்பு சென்சார், என்எப்சி மற்றும் ஐ.பி.எஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இருவித அளவு:
இந்த பாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் பொதுவாக 41 மற்றும் 43எம்.எம் என இருவித அளவுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ-இன்ஸ்டால்
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய செயலிகள் ஆட்டோ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது, எனவே ஸ்பாடிஃபை மற்றும் நூன்லைட் போன்ற செயலிகள் பிரீ- இன்ஸ்டால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 350எம்ஏஎச் பேட்டரி
இதனுள் பொறுத்தப்பட்டுள்ளது, அதன்படி ரேபிட்ட சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த சாதனம்.

கூகுள்
கூகுள் இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி கூட உள்ளது. பின்பு கூகுள் அசஸ்டன்ட் மற்றும் கூகுள் ஃபிட் சேவைகளை பயன்படுத்த முடியும்.

விலை:
இந்த சாதனத்தின் இந்திய ஆரம்ப விலை மதிப்பு ரூ.18,440-ஆக உள்ளது, மேலும் வரும் நவம்பர் 12-ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications