அட்டகாச அம்சங்களோடு ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 6.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 ப்ராசஸர் வசதியுடன் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.18,495 ஆக உள்ளது.

ஃபோசில் ஜென் 5இ பிளாக் சிலிகான், பிரவுன் லெதர், பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டூ-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரோஸ் கோல்ட் டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் ப்ளஷ் சிலிகான் பதிப்புகளுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது.
ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்
ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் இரண்டு அளவுகளில் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது.
ஃபோசில் ஜென் 5இ ஸ்மார்ட்வாட்ச் 390 x 390 தீர்மானம் மற்றும் 328ppi பிக்சல் 1.19 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதய துடிப்பு, டிஸ்டன்ஸ், கலோரி எண்ணிக்கை போன்ற பல செயல்பாட்டு அம்சங்களுடன் வருகிறது.
அலாரம் கடிகாரம், கேலண்டர் அலெர்ட்ஸ், இமெயில் சமூகவலைதளம், டெக்ஸ்ட், மல்டிமீடியா டைம் ஜோன்கள், மியூசிக் கன்ட்ரோல், கூகுள் பே, ஸ்விம் ப்ரூஃப் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் 3ஏடிஎம் வாட்டர் ஃப்ரூப் வசதியுடன் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் உள்ளமைக்கப்பட்ட பயனர்கள் அழைப்புகள், கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. ப்ளூடூத் 4.2 எல்இ, ஜிபிஎஸ், எல்டிஇ மைக்ரோஸ்கோப், இதய துடிப்பு சென்சார் ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications