ஃப்ளிக்ஸ் பை பீட்டல் 'மேட் இன் இந்தியா' பவர் பேங்க் குறைந்த விலையில் அறிமுகம்.. உத்தரவாதமும் உண்டு..
ஃப்ளிக்ஸ் பை பீட்டல் (Flix by Beetel) நிறுவனம் இந்தியச் சந்தையில் 3 புதிய பவர் பேங்க் சாதனங்களை கேட்ஜெட் பிரியர்கள் விரும்பி வாங்கும் வகையில் மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஃப்ளிக்ஸ் பை பீட்டல் நிறுவனம் ஃப்ளிக்ஸ் மராத்தான் 10K ஸ்லிம், ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K ஸ்லிம் மற்றும் ஃப்ளிக்ஸ் டெகாதன் 10K பாக்கெட் என்ற மூன்று மாடல்களை இப்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

ஃப்ளிக்ஸ் பை பீட்டல் - மேட் இன் இந்தியா
பண்டிகை காலத்திற்கு முன்னதாக, இந்திய ஸ்மார்ட் அக்ஸஸரீஸ் பிராண்டான ஃப்ளிக்ஸ் பை பீட்டல், மேட் இன் இந்தியா டேக் உடன் 10,000 எம்ஏஎச் சக்தி கொண்ட 3 பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. பவர் பேங்க் சீரிஸின் கீழ் ஃப்ளிக்ஸ் பை பீட்டல், மூன்று புதிய மாடல்களை சிறிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய வடிவம் மட்டுமின்றி பவர் பேங்க் சாதனங்களை இந்த நிறுவனம் ஸ்லிம்மாகவும் வடிவமைத்துள்ளது.

ஃப்ளிக்ஸ் மராத்தான் 10K ஸ்லிம்
ஃப்ளிக்ஸ் மராத்தான் 10K ஸ்லிம், ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K ஸ்லிம் மற்றும் ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K பாக்கெட் ஆகிய மூன்று புதிய பவர் பேங்க் சாதனங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ .1,499 விலையை நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த பவர் பேங்க்கள் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் டைப் சி சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிற விருப்பத்தில் இவை இப்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது.

ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K ஸ்லிம்
ஃப்ளிக்ஸ் பை பீட்டல் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அனைத்தும் இப்பொழுது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த புதிய ஃப்ளிக்ஸ் மராத்தான் 10K ஸ்லிம், ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K ஸ்லிம் மற்றும் ஃப்ளிக்ஸ் டெகாதான் 10K பாக்கெட் பவர் பேங்க் சாதனங்களுக்கு நிறுவனம் முதல் 400 நாட்கள் உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

டெகாதன் 10 கே பாக்கெட்
இந்த பவர் பேங்க் சாதனங்கள் மேம்பட்ட மில்டிபிள் லேயர் அட்வான்ஸ் சர்கியூட் பாதுகாப்புடன், அதிக வெப்பம் மற்றும் ஷார்ட் சர்கியூட் போன்ற விஷயங்களில் இருந்து சாதனத்தை பாதுகாக்கிறது. பவர் பேங்க் அதிக அடர்த்தி கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் 10W (டெகாத்தான் 10K ஸ்லிம்) மற்றும் 12W (மராத்தான் 10K ஸ்லிம் மற்றும் டெகாதன் 10 கே பாக்கெட்) சார்ஜிங் போன்களை விரைவாக சார்ஜ் செய்கிறது.


Click it and Unblock the Notifications